நேற்று முன்தினம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் தம்பதிக்கு இரட்டை குழந்தை பிறந்ததாக அறிவித்தனர்.
இதற்கு பலரும் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுள்ளதாக பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றது.
இந்தநிலையில் நகை கஸ்தூரி இதுகுறித்து தனது சமூக வலைத்தளப் பக்கத்தில், “மருத்துவ ரீதியாக தவிர்க்க முடியாத காரணங்களைத் தவிர இந்தியாவில் வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ளும் முறை தடை செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் ஜனவரி 2022 முதல் அமலுக்கு வந்தது. அடுத்த சில நாட்களுக்கு இதைப் பற்றி நிறைய கேள்விப்படுவோம்” என பதிவிட்டிருந்தார்.
இந்நிலையில் இரட்டை குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ள விக்கி – நயன் தம்பதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ள நடிகை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில், “ஒருவரது வாழ்வின் மிக அழகான தருணங்களை அழிப்பவர்கள் தான் முதலில் சட்டப்படி தண்டிக்கப்பட வேண்டும்.
சட்டம் தெரியும் மருத்துவம் தெரியும்னு சில மதிப்பு இல்லாத கோமாளிகள் பேட்டி கொடுக்கறதும் டுவீட் போடறதும். திருந்தவேமாட்டங்க. கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார், யாருக்கு என்ன கொடுக்க வேண்டும் என்பது அவருக்கு தெரியும்” என்று பகிர்ந்துள்ளார்.
இவரின் இந்த பதிவு நடிகை கஸ்துரியை மறைமுகமாக தாக்குவதாக ரசிகர்கள் தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகின்றது.
#Vanitha #Kasthuri

