24 660a7b4c88bfc
சினிமாபொழுதுபோக்கு

1000 கோடி வசூலுக்கு தயாராகும் திரிஷா.. அடுத்த படத்தில் இந்த நடிகருடன் தான் ஜோடி

Share

1000 கோடி வசூலுக்கு தயாராகும் திரிஷா.. அடுத்த படத்தில் இந்த நடிகருடன் தான் ஜோடி

பொன்னியின் செல்வன் வெற்றிக்கு பின் நடிகை திரிஷாவிற்கு தொடர்ந்து பட வாய்ப்புக்குள் குவித்து வருகிறது. விஜய்யுடன் லியோ நடித்து முடித்த கையோடு அஜித்துடன் விடாமுயற்சி படத்தில் கமிட்டானார்.

மேலும் மோகன்லாலுடன் ராம், சிரஞ்சீவியுடன் விஸ்வம்பரா, கமல் ஹாசனுடன் தக் லைஃப் என முன்னணி நட்சத்திரங்களின் படங்கள் என்றாலே திரிஷாவை தான் கமிட் செய்து வருகிறார்கள். அந்த அளவிற்கு மார்க்கெட்டின் உச்சத்தில் இருக்கிறார். இவர் தற்போது நடிக்கும் படங்களுக்கு ரூ. 12 கோடி வரை சம்பளம் வாங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் திரிஷாவிற்கு மற்றொரு மிகப்பெரிய ஜாக்பாட் அடித்துள்ளது. ஆம், அல்லு அர்ஜுன் நடிக்கவிருக்கும் புதிய படத்திலும் கதாநாயகியாக திரிஷா நடிக்கவேண்டும் என பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அட்லீ இயக்கத்தில் தான் அல்லு அர்ஜுன் அடுத்ததாக நடிக்கவுள்ளார் என ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.

கடைசியாக அட்லீ இயக்கிய ஜவான் திரைப்படம் ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூல் செய்த நிலையில், அல்லு அர்ஜுனுடன் கூட்டணி அமைக்கும் படமும் ரூ. 1000 கோடி வசூல் செய்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. பொறுத்திருந்து பார்ப்போம் இப்படத்திற்காக அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகிறது என்று.

Share
தொடர்புடையது
RKFI scamers
சினிமாபொழுதுபோக்கு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கை: வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் மோசடிகளை நம்ப வேண்டாம்!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில்...

images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...

Keerthy Suresh white saree 4 1738660296537 1738660296714
சினிமாபொழுதுபோக்கு

துபாய், அமெரிக்கா போல இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை; சட்டங்கள் மாற வேண்டும்” – நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கம்!

இந்தியாவில் பெண்களுக்குப் பாதுகாப்பு குறைவாகவே இருப்பதாக நடிகை கீர்த்தி சுரேஷ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். துபாய், அமெரிக்கா...

125086256
சினிமாபொழுதுபோக்கு

தைரியம் இருந்தால் டி.என்.ஏ. டெஸ்டுக்கு வாங்க கணவரே!’ – சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜுக்கு மனைவி பகிரங்க சவால்!

பிரபல சமையல் கலைஞர் மாதம்பட்டி ரங்கராஜ் மீது, தன்னைத் திருமணம் செய்து ஏமாற்றிவிட்டதாக ஆடை வடிவமைப்பாளர்...