விஜய்க்கு மட்டும் தான் அது.. திருமணம் ஆகாத 40 வயது நடிகை எடுத்த முடிவு

tamilni 356

விஜய்க்கு மட்டும் தான் அது.. திருமணம் ஆகாத 40 வயது நடிகை எடுத்த முடிவு

தமிழ் சினிமாவின் எவர் க்ரீன் ஜோடிகளில் ஒன்று விஜய் – திரிஷா. கில்லி, திருப்பாச்சி, ஆதி, குருவி மற்றும் சமீபத்தில் வெளிவந்த லியோ என தொடர்ந்து இதுவரை ஐந்து முறை இவர்கள் இருவரும் இணைந்து நடித்துள்ளனர்.

இந்த நிலையில், 6வது முறையாக விஜய் – திரிஷா ஜோடி இணைந்துள்ளது என சில தினங்களுக்கு முன் தகவல் ஒன்று வெளிவந்தது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் தற்போது நடித்து கொண்டிருக்கும் திரைப்படம் Goat.

இப்படத்தின் பாடல் காட்சி சமீபத்தில் சென்னையில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் காட்சியில் நடிகை திரிஷா நடனம் ஆடியுள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த திரிஷா, தற்போது Goat திரைப்படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளாராம்.

ஏற்கனவே ஷாருக்கான் திரைப்படம் ஒன்றில் நடிகை திரிஷாவை குத்து பாடலுக்கு நடனமாட கேட்டுள்ளார். அவர்களுக்கு ரெட் சிக்னல் காட்டியுள்ளார் திரிஷா. ஆனால், தற்போது விஜய் படத்திற்கு மட்டும் க்ரீன் சிக்னல் கொடுத்தது ஏன் என சிலர் கேட்டு வருகிறார்கள்.

Exit mobile version