tomoto rice
சமையல் குறிப்புகள்பொழுதுபோக்கு

பிரியாணி ஸ்டைலில் தக்காளி சாதம்

Share

தேவையான பொருட்கள்

அரிசி – ஒரு கப்
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 4
பூண்டு – 4 பல்
பச்சைமிளகாய் – 4
பட்டை – 2 துண்டு
கிராம்பு – 2
முந்திரி – 20
சீரகம் – அரை டீஸ்பூன்
ஏலக்காய் – 2
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
கறிவேப்பிலை, மல்லித்தழை – சிறிது

செய்முறை

வெங்காயம், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

அரிசியை உதிரியாக வடித்துக் கொள்ளவும்.

தக்காளியைத் தனியாகவும், பூண்டு – பச்சைமிளகாயைத் தனியாகவும் அரைத்துக் கொள்ளவும்.

கடாயில் எண்ணெய் விட்டு சூடானதும் சீரகம், ஏலக்காய், கிராம்பு, பட்டை, முந்திரி போட்டு தாளித்த பின்னர் பூண்டு – பச்சை மிளகாய் விழுதை சேர்த்து வதக்கவும்.

அடுத்து பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கிய பின்னர், தக்காளி சாறை ஊற்றி உப்பு, மஞ்சள்தூள், கறிவேப்பிலை சேர்த்து, எண்ணெய் பிரியும்வரை கொதிக்க விடவும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் வடித்த சாதத்தைப் போட்டுக் கிளறி கொத்தமல்லித்தழை தூவி பரிமாறவும்.

இப்போது சூப்பரான தக்காளி பிரியாணி ரெடி.

#lifestyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Untitled 38
சினிமாபொழுதுபோக்கு

த.வெ.க கொடி நிறத்தில் திரிஷாவின் உடை: ரசிகர்கள் விவாதம்!

தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, நடிகர் விஜய் தீவிரமாகச் செயல்பட்டு வரும்...

Untitled 36
சினிமாபொழுதுபோக்கு

சமூக வலைதளங்களில் பேசுபொருளாகும் விஜய் – திரிஷா விவகாரம்: வைரலாகும் புதிய தகவல்கள்!

நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா குறித்து கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பரவி...

05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...