பெண்கள் அதிகம் அக்கறை கொள்வது அவர்களின் சரும பாதுகாப்பில் தான். சருமப் பாதுகாப்புக்கு கடைகளில் கிடைக்கும் இரசாயனம் அடங்கிய பொருட்களை வாங்கி பயன்படுத்துவதை தவிர்த்து வீட்டிலேயே இயற்கையாக கிடைக்கும் பொருட்களை பயன்படுத்துங்கள். உங்கள் சருமம் பாதுகாக்கப்படுவதுடன் அழகாகவும் மிளிர்வீர்கள்.
பால்
ஒரு தேக்கரண்டி பால் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் ஆகியவற்றை நன்கு கலந்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளுங்கள். இந்த கலவையை முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து சுத்தமான நீரில் கழுவுங்கள். இதை தினமும் செய்து வர சருமம் மினுமினுப்பாவதுடன் ஆரோக்கியமாகவும் இருக்கும்.
மஞ்சள்
ஒரு தேக்கரண்டு மஞ்சள்தூளுடன், 3 தேக்கரண்டி எலுமிச்சை சாறு கலந்து பேஸ்ட் ஆக்கிகொள்ளுங்கள். இதனை முகத்தில் தடவி மசாஜ் செய்து 15 நிமிடங்கள் கழித்து குளிர்மையான நீரில் கழுவுங்கள். இதனை வாரத்தில் 2 அல்லது 3 நாட்கள் செய்து வர சருமத்தில் உள்ள தழும்புகள், பருக்கள் நீங்கி முகம் பொலிவுறும்.
முட்டை
முட்டையை உடைத்து நன்றாக அடித்தெடுத்து அதை முகத்தில் தடவிக்கொள்ளுங்கள். அது நன்றாக காயும் வரை விட்டு குளிர்ந்த நீரில் கழுவிக்கொள்ளுங்கள். முட்டையின் வாசனை வருவதைத் தவிர்க்க எலுமிச்சை சாறு ஈர்த்துக்கொள்ளலாம். வாரத்தில் இரண்டு தடவை இதனை செய்து வர சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் மாறும்.
தக்காளி
இரண்டு தக்காளி மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து பேஸ்ட் ஆக்கிக்கொள்ளவும். பேஸ்ட்டை முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து குளிர்நீரால் கழுவிக்கொள்ளுங்கள். இது சருமத்தின் மினுமினுப்பை அதிகரிக்கச் செய்யும்.
தயிர்
இரண்டு தேக்கரண்டி தயிர் மற்றும் ஒரு தேக்கரண்டி தேன் கலந்து பேஸ்ட் ஆக்கி முகத்தில் தடவி, 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவுங்கள். தினமும் இதை செய்து வர சருமம் ஒளிரும்.
கடலை மாவு
2 தேக்கரண்டி கடலை மாவு மற்றும் பன்னீர் சேர்த்து நன்றாக குழைத்து பேஸ்ட் செய்துகொள்ளவும். இதனை முகத்தில் பூசி நன்றாக காய்ந்த பின்னர் வெதுவெதுப்பான நீரில் கழுவவும். அடிக்கடி இதனை செய்து வர சருமம் பொலிவாகும்.
#BeautyTips
Leave a comment