பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஒவ்வொரு சீசனிலும் ரசிகர்களுக்கான செல்லக்குட்டி ஒருவர் இருப்பார் என்பது அனைவரும் அறிந்ததே. முதல் சீசனில் ஓவியா, இரண்டாவது சீசனில் யாஷிகா, மூன்றாவது சீஸனில் லாஸ்லியா, நான்காவது சீசன் ரம்யா பாண்டியன், ஐந்தாவது சீசனில் அக்சரா ரெட்டி ஆகியோர் ரசிகர்களின் மிகவும் அதிக விரும்பத்தக்க போட்டியாளர்களாக இருந்தனர்.
அந்த வகையில் இந்த ஆறாவது சீசனில் முதல் நாளே ஜனனி அதிகமாக ரசிகர்களை கவர்ந்து விட்டார் என்பதும் அவருக்கு ஆர்மிகளும் வெறித்தனமாக தொடங்கிவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் சற்று முன் வெளியான முதல் புரமோவில் ஆயிஷா கூட எனக்கு சண்டை வரலாம் என்று எதிர்பார்ப்பதாக ஜனனி கூறியதும் ஆயிஷா ஆவேசமாகி அவரை நோக்கி கத்துகிறார். அதன் பிறகு திடீரென ’ஐ ஆம் சாரி’ என்று சமாதானம் ஆகிறார்.
கடந்த இரண்டு நாட்களாக ஆயிஷா மற்றும் ஜனனி இடையே சின்ன சின்ன மோதல்கள் வந்து கொண்டிருக்கும் நிலையில் விரைவில் இது மிகப்பெரிய மோதலாக வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களின் மிகப்பெரிய ஆதரவு ஜனனிக்கு இருப்பதை போல் ஆயிஷாவுக்கும் இருப்பதால் இந்த மோதல் எதில் முடியும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
#BiggBoss
Leave a comment