உங்களை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஷோபனா எல்லா ஆண்கள் வாழ்வில் இல்லாவிடினும் ஒரு சிலர் வாழ்வில் நிச்சயம் இருப்பாள். அவளை எந்த காரணத்துக்காகவும் தொலைத்து விடாதீர்கள்.
மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் தனுஷ், நித்யா மேனன், பாரதி ராஜா, பிரியா பவானி சங்கர் மற்றும் பலர் நடிப்பில் அண்மையில் வெளியாகி வெற்றிநடை போடும் திரைப்படம் திருசிற்றம்பலம். கதைக்களம் மட்டுமட்டா ஒவ்வொரு கதாபாத்திரமும் ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.
வழமை போல அனிருத் இசை மேலும் படத்தை மெருகூட்டியுள்ளது. தனுஷ் உட்பட அனைவரையும் தாண்டி ரசிகர்களை கட்டிப்போட்டுள்ளது நித்தியாமேனனின் நடிப்பு மட்டுமல்ல. அவரின் கதாபாத்திரமும்.
தனுஷின் சிறு வயது முதல் கூடவே இருப்பவர். தன் நண்பனுக்கு எது பிடிக்கும், பிடிக்காது, எது அவனை பாதிக்கிறது, எப்பொழுது சந்தோஷமாக இருக்கும், எப்போது விலகி இருக்க வேண்டும் என அனைத்தையும் பாத்து பாத்து செய்பவள் சோபனா. அவனது இன்ப துன்பம் அனைத்தையும் அறிந்த ஷோபனா.. அப்படிப் பார்த்தால் ஷோபனா நல்ல நண்பி மட்டுமல்ல. அவனைக் காப்பாற்ற வந்த தேவதையும் கூட.
வழக்கமாக எதையாவது பகிர்ந்துகொள்ளும் ஷோபனாவால் தன் காதலை வெளிப்படுத்த முடியவில்லை. தனது உணர்வுகள், அவளுடைய விருப்பங்கள் பற்றி அவன் தானாகவே உணர வேண்டும் என்று விரும்புகிறாள்.
ஒரு கட்டத்தில் அவளின் உணர்வுகளையும் காதலையும் புரிந்து கொள்ளும் திருவையும் ஷோபனாவையும் சேர்த்து வைக்கிறது கிளைமாக்ஸ்.
உங்கள் மௌன மொழியைப் புரிந்துகொள்ளக்கூடிய, உங்கள் கண் அசைவுகளின் மூலம் உங்கள் உள் உணர்வுகளைப் பார்க்கக்கூடிய, உங்களை முழுமையாகப் பிரதிபலிக்கக்கூடிய ஷோபனா எல்லா ஆண்கள் வாழ்வில் இல்லாவிடினும் ஒரு சிலர் வாழ்வில் நிச்சயம் இருப்பாள். அவளை எந்த காரணத்துக்காகவும் தொலைத்து விடாதீர்கள்.
#Cinema
Leave a comment