download 9 1 6
சினிமாபொழுதுபோக்கு

ருத்ரன்’ படத்தை வெளியிட தடை!

Share

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் என பன்முகத்தன்மை கொண்ட ராகவா லாரன்ஸ் தற்போது நடித்திருக்கும் படம் ருத்ரன்.

இப்படத்தின் மூலம் பைவ் ஸ்டார் கதிரேசன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவர் ‘பொல்லாதவன்’, ‘ஆடுகளம்’, ‘ஜிகர்தண்டா’ உட்பட பல படங்களைத் தயாரித்தவர் ஆவார்.

‘ருத்ரன்’ படத்தில் ராகவா லாரன்சுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க, சரத்குமார் வில்லனாக நடித்துள்ளனர்.

பூர்ணிமா பாக்யராஜ் உட்பட பலர் நடித்துள்ளனர். ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் மற்றும் மலையாள மொழிகளில் உருவாகியுள்ள இந்த படம் வரும் 14-ம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில்.

தற்போது ஏப்ரல் 24 -ஆம் தேதி வரை படத்தை வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. ‘ருத்ரன்’ படத்தின் இந்தி உள்ளிட்ட வடமொழிகளின் டப்பிங் உரிமையை ரெவன்சா என்ற நிறுவனம் பெற்றிருந்தது.

டப்பிங் உரிமைக்காக ரூ.12.25 கோடிக்கு பட தயாரிப்பு நிறுவனத்துடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்திருந்தது. இதற்காக முன்பணமாக ரூ.10 கோடி செலுத்தியதாக சொல்லப்படுகிறது.

ரூ.10 கோடி செலுத்திய நிலையில், மேலும் ரூ.4.5 கோடி கேட்டு ஒப்பந்தத்தை தயாரிப்பு நிறுவனம் ரத்து செய்ததாக, ரெவன்சா நிறுவனத்தின் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் ருத்ரன் திரைப்படத்தை ஏப்ரல் 24 -ஆம் தேதி வரை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.

ருத்ரன் இந்நிலையில், ‘ருத்ரன்’ திரைப்படத்திற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை எதிர்த்து படக்குழு சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளதாகவும் நாளை மறுதினம் படம் வெளியாக உள்ள நிலையில், அவசர வழக்காக நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

#cinema

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...