‘வாரிசு’ உரிமையை கைப்பற்றிய விஜய் பட தயாரிப்பாளர்?

FfztB2DUUAAVfV3

தளபதி விஜய் நடித்த ‘வாரிசு’ திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்து விட்டது என்பதும் இன்னும் ஒரு சில நாட்களில் முழுமையாக படப்பிடிப்பை முடிந்து விடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் சேட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமை ஏற்கனவே விற்பனை ஆகிவிட்டதாகவும் அதுமட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளில் ரிலீஸ் உரிமையும் விற்பனை ஆகி விட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் ‘வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை பெற பல முன்னணி நிறுவனங்கள் போட்டி போட்டதாக கூறப்பட்ட நிலையில் இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை செவன்ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த நிறுவனம்தான் தளபதி விஜய் நடிக்க இருக்கும் ‘தளபதி 67’ படத்தை தயாரிக்க உள்ளது என்பதும் ஏற்கனவே இந்நிறுவனம் விஜய் நடித்த ‘மாஸ்டர்’ படத்தை தயாரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

‘வாரிசு’ படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை இதுவரை இல்லாத அளவுக்கு மிகப் பெரிய தொகைக்கு விற்பனையாகி உள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை பொங்கல் திருநாளில் சோலோவாக ரிலீஸ் செய்யவும் திட்டமிடப்பட்டு வருகிறது என்றும் கூறப்படுகிறது.

விஜய், ராஷ்மிகா மந்தனா பிரகாஷ்ராஜ், சரத்குமார், ஷாம், யோகிபாபு, பிரபு, ஜெயசுதா, ஸ்ரீகாந்த், சங்கீதா, சம்யுக்தா, உள்பட பலர் நடித்து வரும் இந்த படம் கார்த்திக் பழனி ஒளிப்பதிவில், பிரவிண் கே.எல் படத்தொகுப்பில் உருவாகி வருகிறது. தில் ராஜூ தயாரிப்பில் வம்சி இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகி வருகிறது.

#Cinema

Exit mobile version