இசைப்புயல் ஏஆர் ரஹ்மானின் மகள் கதீஜாவுக்கும், ரியாஸ் என்பவருக்கும் கடந்த 29ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் இடம்பெற்றது.
இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானின் மகளை திருமணம் செய்யப்போகும் ரியாஸ் ஒரு சவுண்ட் இன்ஜினியர் என்றும் இவர் பல பிரபல இசையமைப்பாளர்களிடம் பணி புரிந்துள்ளார் என்பதும் குறிப்பாக ஏஆர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த ’தமாஷா’ என்ற இந்தி திரைப்படத்திலும் அவர் பணிபுரிந்துள்ளார்.
இதனையடுத்து ஏ.ஆர். ரஹ்மான் தன்னிடம் பணிபுரிந்த ஒருவரையே தனது மருமகனாக்கியுள்ளார் என்ற உண்மையும் தற்போது தெரியவந்துள்ளது.
#CinemaNews
Leave a comment