தமிழ் திரையுலகின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு சமீபத்தில் வாடகைத் தாய் மூலம் இரட்டை குழந்தை பிறந்த நிலையில் அந்த குழந்தைகளை நேரில் சந்தித்த பிரபல நடிகை ஒருவர் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த புகைப்படம் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனை கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டார் என்பதும் கடந்த சில வாரங்களுக்கு முன் அவர் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொண்டார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நயன்தாராவின் வீட்டுக்கு நேரில் சென்ற நடிகை ராதிகா அவரது இரட்டை குழந்தைகளை நேரில் பார்த்து வாழ்த்து தெரிவித்தார். மேலும் அவர் இது குறித்த புகைப்படத்தை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு ’மிகவும் அற்புதமானவர் பெண் நயன்தாரா என்றும் அவரது வீட்டில் சில நிமிடங்கள் இருந்து அவரது குழந்தைகளை சந்தித்தது மிகுந்த மகிழ்ச்சி’ என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவரது இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.
#cinema
Leave a comment