download 15 1 4
சினிமாபொழுதுபோக்கு

தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிப்பு!

Share

தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிப்பு!

விபுல்ஷா தயாரிப்பில் இயக்குனர் சுதிப்டோ சென் இயக்கத்தில் கடந்த மே 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘தி கேரளா ஸ்டோரி’. இப்படத்திற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும் பலர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.

‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு தடை விதிக்க கோரி கேரள ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. ஆனால் இப்படத்துக்கு கேரள ஐகோர்ட்டு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. தலைமை நீதிபதி சந்திரசூட் மற்றும் நீதிபதி நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், இம்மனுவை அவசரமாக விசாரிக்க கோரினார்.

அப்போது இந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளதா என்று நீதிபதிகள் கேட்டனர். படத்தை வெளியிட தடை விதிக்க மறுத்து விட்டதாக கபில்சிபல் தெரிவித்தார். இதையடுத்து இந்த மனுவை வருகிற 15-ந்தேதி விசாரிப்பதாக நீதிபதிகள் தெரிவித்தனர். மேற்கு வங்காளத்தில் ‘தி கேரளா ஸ்டோரி’ படத்துக்கு அம்மாநில அரசு தடை விதித்துள்ளது. இதை எதிர்த்து படத்தின் தயாரிப்பாளர்கள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளனர்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...