ஆன்லைன் மூலம் வாங்கிய வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும், அது என் தொண்டயில் சிக்கியது எனவும் நடிகை ஒருவர் கூறியுள்ளார்.
சன் டிவியில் ஒளிபரப்பான கண்மணி தொடரில் முக்கியமான வேடத்தில் நடித்திருந்த சாம்பவி சில காரணங்களால் அத்தொடரில் இருந்து விலகியிருந்தார்.
தற்போது இவர் தெலுங்கு தொடர் ஒன்றில் நடித்து வருகிறார்.
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தகவல் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
அவரது பதிவில், சென்னையில் உள்ள தனியார் உணவகத்தில் ஆன்லைன் டெலிவரி மூலம் உணவு வாங்கி சாப்பிட்டதாகவும், வடையில் பிளாஸ்டிக் இருந்தது என்றும் பதிவிட்டுள்ளார்.
அத்துடன், அந்த உணவில் பிளாஸ்டிக் இருப்பதை அவதானிக்காமல் சாப்பிட்டமையால், தொண்டையில் சிக்கிக்கொண்டதாகவும் மிகவும் சிரமப்பட்டு அதனை வெளியில் எடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் உணவகங்களில் உணவு வாங்கி சாப்பிடும்போது கவனமாக இருங்கள் என்றும் எச்சரிக்கை தரக்கூடிய வகையிலும் பதிவிட்டுள்ளார்.