இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா பல மொழியில் அதிக படங்களில் நடித்து நிறைய ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
முன்னணி கதாநாயகர்கள் நயன்தராவின் கால்ஷீட்டுக்காக காத்திருந்து படங்களை துவங்கும் நிலைமை உள்ளது.
இவர் தற்போது ‘இறைவன்’ திரைப்படத்தில் ஜெயம் ரவி ஜோடியாகவும் இந்தியில் ‘ஜவான்’ படத்தில் ஷாருக்கானுடனும் நடித்து வருகிறார்.
இதைத்தொடர்ந்து நயன்தாராவின் 75-வது படத்தை இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, கன்னடா, மலையாளம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் தயாராகவுள்ள இப்படத்தில் நடிகர் ஜெய் இணைந்துள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது.
இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, நயன்தாராவின் 75-வது படத்திற்கு தமன் இசையமைக்கவுள்ளார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளது.
#Cinema
Leave a comment