நெல்சன் இயக்கத்தில், தளபதி விஜய் நடிப்பில் அண்மையில் திரைக்கு வந்து வசூல் மழை பொலிந்து வருகிறது ‘பீஸ்ட்’
சன் பிக்ஸரஸ் தயாரிப்பில் உருவாக்கிய இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அனிருத் இயையமைத்திருந்தார்.
ஒரு பக்கம் படம் 200 கோடிக்கும் மேலாக வசூல் செய்து வரும் நிலையில், படத்தின் பாடல்களும் சத்தமில்லாது சாதனை புரிந்து வருகின்றன.
இந்த நிலையில், ‘பீஸ்ட்’ படக்குழுவினருக்கு தளபதி விஜய் தனது வீட்டுக்கு அழைத்து விருந்து வைத்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள இயக்குநர் நெல்சன், தளபதி விஜய்க்கு நன்றியையும் தெரிவித்துள்ளார்.
‘பீஸ்ட்’ படத்திற்கு வாய்ப்பும், ஒத்துழைப்பும் கொடுத்த விஜய் அவர்களுக்கு மிகவும் நன்றி. அவருடைய உண்மையான உழைப்பு என்னை ஆச்சரியப்பட வைத்தது’ எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும், இந்த அரிய வாய்ப்பை வழங்கிய சன் பிக்சர்ஸ் நிறுவனம், கலாநிதி மாறன் மற்றும் காவியா மாறன் ஆகியோர்களுக்கு நன்றி. இந்த படத்தில் பணிபுரிந்த அனைத்து கலைஞர்களுக்கும் எனது நன்றி. எனவும் நெல்சன் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.
#Cinema