மீண்டும் சமூக வலைத்தளங்களை கட்டி போட்ட தளபதி – வைரலாகும் ‘தளபதி66’

தளபதி விஜய்யின் பீஸ்ட் திரைப்படம் தொடர்பான தகவல்கள் நாளுக்கு நாள் வெளியாகி தளபதி ரசிகர்களை ஆக்டிவ்வாக வைத்துள்ளது.

எதிர்வரும் ஏப்ரல் 13 ஆம் திகதி படம் திரைக்கு வரவுள்ள நிலையில், பாடல்கள், ட்ரெய்லர் என வெளியாகி சாதனைமேல் சாதனை புரிந்துவருகின்றன.

இந்த நிலையில், தளபதி ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் முகமாக தளபதி 66 நாயகி தொடர்பான தகவல் வெளியாகி ரசிகர்களை திக்குமுக்காடச்செய்தது. நாயகி தேர்வு இடம்பெற்று வந்த நிலையில், விஜய்யின் தீவிர ரசிகையான ராஷ்மிகா மந்தனா தளபதி66 படத்தின் ஒப்பந்தமாகியுள்ளார் என படக்குழு உறுதி செய்தமை அனைவரும் அறிந்ததே.

277765041 385229773610384 1987075072806392703 n

இந்த நிலையில், படத்தின் பூஜை சென்னையில் நேற்று மிக எளிமையாக நடந்து முடிந்துள்ளது. இந்த பூஜையில் தளபதி விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, தமன், சரத்குமார் உள்பட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைத்தளங்களை ஆக்கிரமித்துள்ளன.

இதேவேளை, படத்தின் பூஜை மட்டுமின்றி படப்பிடிப்பும் நேற்றைய தினமே தொடங்கி விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

   ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பாத்த ஒரு ஜோடி விஜய் – ராஷ்மிகா ஜோடி. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் எதிர்பார்ப்பு மட்டுமேள்ளது தளபதியுடன் இணைந்து நடிக்க வேண்டும் என்ற ராஷ்மிகா கனவும் நிறைவேறியுள்ளது.

பூஜை அன்று எடுத்த விஜய் – ராஷ்மிகா ஜோடியில் க்யூட் புகைப்படங்களை தளபதி ரசிகர்கள் வேற லெவலில் வைரலாக்கி வருகின்றனர். அப்புறம் என்ன அடுத்த அப்டேட்டுக்கு வைட்டிங் தான்….

#Cinema

Exit mobile version