ஜனநாயகன் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் பிரம்மாண்டம்: தனுஷ் பங்கேற்க வாய்ப்பு!

25 6932b0d4a8851

நடிகர் விஜய்யின் நடிப்பில் உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற டிசம்பர் 27ஆம் தேதி மலேசியாவில் பிரம்மாண்டமாக நடக்கவிருக்கிறது.

மலேசியாவில் உள்ள புகித் ஜலீல் அரங்கத்தில் (Bukit Jalil Stadium) இந்த விழா நடைபெறுகிறது. இந்த அரங்கத்தில் சுமார் 85,500 பேர் அமர்ந்து பார்க்க முடியும்.

‘தளபதி கச்சேரி’ மற்றும் ‘இசைத் திருவிழா’வுடன் ‘ஜனநாயகன்’ இசை வெளியீடும் நடப்பதால், இந்த நிகழ்ச்சியை நேரில் காண விஜய் ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

விஜய்யின் திரை வாழ்க்கையில் பல சூப்பர்ஹிட் பாடல்களைப் பாடி அசத்திய பின்னணிப் பாடகர்கள் இந்த விழாவில் கலந்துகொள்கிறார்கள்.

இந்த நிலையில், ‘ஜனநாயகன்’ இசை வெளியீட்டு விழாவில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோவான தனுஷ் கலந்துகொள்ளப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், நெல்சன், அட்லீ ஆகியோரும் இதில் கலந்துகொள்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனுஷின் வருகை உறுதியானால், அது ரசிகர்களுக்குச் செம ட்ரீட்டாக அமையும் என்பதில் சந்தேகமில்லை. ஏற்கனவே, ‘மெர்சல்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் தனுஷ் கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version