download 5 1 13
சினிமாபொழுதுபோக்கு

ஜப்பான் திரைப்பட விழாவில் தளபதிக்கு விருது!

Share

ஜப்பான் திரைப்பட விழாவில் தளபதிக்கு விருது!

நடிகர் விஜய் தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப்படத்தையடுத்து விஜய் தனது 68வது படத்தை இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கிறார். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

இந்நிலையில் ஜப்பானின் ஒசாகா தமிழ் சர்வதேச திரைப்பட விழாவில் கடந்த 2021 ஆம் ஆண்டின் சிறந்த நடிகர் விருது நடிகர் விஜய்க்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த விருது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்துக்காக விஜய்-க்கு வழங்கப்படவுள்ளது. பா.இரஞ்சித் தலைவி படத்துக்காக சிறந்த நடிகை விருது கங்கனா ரணாவத்துக்கும், சிறந்த படமாக சார்பட்டா பரம்பரை படத்துக்கும், சிறந்த இயக்குனர் விருது சார்பட்டா பரம்பரை படத்துக்காக பா.இரஞ்சித்துக்கும் வழங்கப்படவுள்ளது.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Recent Posts

தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...