‘தளபதி 67’ – வாய்ப்பை மறுத்த பிரபல நடிகர்

தளபதி விஜய் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படமான ‘தளபதி 67’ படத்தில் பல பிரபலங்கள் நடிக்க இருப்பதாக வெளியான செய்தியை பார்த்தோம். குறிப்பாக பாலிவுட் பிரபல நடிகர் சஞ்சய் தத், தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் மற்றும் மிஷ்கின் நடிப்பதாகவும், மேலும் இந்த படத்தில் விஷால் மெயின் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்பட்டது.

அதேபோல் மூன்று பிரபல நடிகைகள் இந்த படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘தளபதி 67’ படத்தில் நவரச நாயகன் கார்த்திக் நடிப்பதற்காக படக்குழுவினர் அணுகினார்கள் என்றும் ஆனால் அவர் நடிக்க மறுத்து விட்டார் என்றும் கூறப்படுகிறது.

karthik

நடிகர் கார்த்திக் தற்போது கால் மூட்டுவலி பிரச்சினையில் இருப்பதாகவும் அதனால் அவரால் ஒரு மணி நேரத்திற்கு மேல் தொடர்ந்து நிற்க முடியாது என்பதால் அவர் தன்னால் இந்த படத்தில் நடிக்க முடியாது என்று கூறியதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கார்த்திக் பிசியோதெரபி சிகிச்சை எடுத்துக் கொண்டு வருவதால் ’தளபதி 67’ படத்தில் நடிக்க முடியாத நிலை ஏற்பட்டது என லோகேஷ் கனகராஜ் இடம் அவர் தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது. இதனை அடுத்து அந்த கேரக்டரில் தான் தற்போது இயக்குனர் மிஷ்கின் நடிக்க இருப்பதாக தெரிகிறது.

#Cinema

Exit mobile version