23 653a31019c119
சினிமாபொழுதுபோக்கு

அரண்மனை 4 படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம்… இத்தனை கோடி

Share

அரண்மனை 4 படத்திற்காக தமன்னா வாங்கிய சம்பளம்… இத்தனை கோடி

தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை தமன்னா.

இதுவரை 75க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள இவர் 2005ம் ஆண்டு சந்த் சா ரோஷன் என்ற பாலிவுட் படம் மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தார்.

பின் அப்படியே தெலுங்கில் ஸ்ரீ படத்தின் மூலம் அறிமுகமாக தமிழில் 2006ம் ஆண்டு கேடி படத்தின் மூலம் எண்ட்ரி கொடுத்தார்.

அயன், பையா, சுறா, ஸ்கெச்ட், வீரம் என முன்னணி நடிகர்களுடன் படங்களில் நடித்து கலக்கிய தமன்னா சில மாதங்களுக்கு முன்பு காவாலா பாடல் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இப்போது அசோ அசோ அச்சச்சோ என்ற பாடல் மூலம் மக்களை ஆட்டம் போட வைத்துள்ளார்.

சுந்தர்.சி இயக்கிய அரண்மனை 4 படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார், படமும் ரூ. 70 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

இந்த நிலையில் ஜெயிலர் படத்திற்கு பின் தமன்னா தனது சம்பளத்தை 30% உயர்த்தி அரண்மனை படத்திற்காக தமன்னா ரூ.4-5 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது.

ரஜினியின் ஜெயிலர் படத்திற்காக தமன்னா ரூ. 3 கோடி வரை சம்பளம் பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share
தொடர்புடையது
24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...

22 14
பொழுதுபோக்குசினிமா

மும்பையிலுள்ள இரண்டு சொகுசு வீடுகளை விற்பனை செய்தார் நடிகர் பிரபுதேவா: ரூ. 14.80 கோடிக்கு ஒப்பந்தம்!

நடன இயக்குனர், நடிகர், இயக்குனர் எனப் பன்முகத்தன்மை கொண்ட பிரபுதேவா, தற்போது தென்னிந்திய மற்றும் பாலிவுட்...

21 15
சினிமாபொழுதுபோக்கு

சினிமா நடிகைகள் குறித்து அரசியல்வாதிகளின் அவதூறு பேச்சு: நடிகை குஷ்பு கடும் கண்டனம்!

அண்மைக் காலமாக அரசியல் மேடைகளில் பெண் திரைக்கலைஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு அரசியல் தலைவர்கள் கொச்சையாகப் பேசி...