15 5
சினிமாபொழுதுபோக்கு

கேரவனில் நடந்த துயரம்!! மனம் திறந்த தமன்னா.. அதிர்ச்சி தகவல்

Share

இந்தியளவில் பிரபலமான நடிகைகளில் ஒருவர் தமன்னா. இவர் தமிழில் அயன், பையா, வீரம், சுறா, தேவி, அரண்மனை- 4,ஜெயிலர் போன்ற பல படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர்.

20 ஆண்டுகளாக சினிமாவில் இருந்து, இன்றும் பல இளம் நடிகைகளுக்கு போட்டியாக ஜொலித்து கொண்டு இருக்கிறார். படங்கள் மற்றும் வெப் தொடர்கள் என கலக்கிக்கொண்டு இருக்கும் தமன்னா, நடிப்பு மட்டுமின்றி நடனத்திலும் தற்போது கவனம் செலுத்தி வருகிறார்.

அந்த வகையில் ஜெயிலர், ஸ்ட்ரீ 2 என தொடர்ந்து சூப்பர்ஹிட் படங்களில் தமன்னாவின் நடனம் இடம்பெற்று வருகிறது. இந்நிலையில், தமன்னா அவரது கேரவனில் நடந்த துயரம் குறித்து பேசிய விஷயம் தற்போது பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில், ” நான் என் கேரவனில் இருக்கும்போது எனக்கு பிடிக்காத ஒன்று நடந்தது. அதனால் மிகவும் மனம் உடைந்த என் கண்கள் குளமாகின. அந்த நேரத்தில் எனக்கு ஷூட்டிங் இருந்தது அதனால் என்னால் அந்த இடத்தில் அழ முடியாது.

அப்போது நான் என்னிடம் இது ஒரு உணர்ச்சி மட்டும் தான். அதை நான் கட்டுப்படுத்த வேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். பின்னர் இந்தக் கடினமான உணர்ச்சியை மகிழ்ச்சியாக மாற்றிக்கொண்டேன். இது எனக்கு மிகவும் உதவியது ” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
05 21
பொழுதுபோக்குசினிமா

பாக்ஸ் ஆபீஸ் சாதனை: 4 நாட்களில் 750 கோடி வசூலித்து மிரட்டும் ‘துரந்தர் 2’!

பாலிவுட் இயக்குனர் ஆதித்யா தார் இயக்கத்தில் ரன்வீர் சிங், மாதவன், அக்சய் கண்ணா, அர்ஜுன் ராம்பால்...

13 17
சினிமாபொழுதுபோக்கு

தயாரிப்பாளராக அவதாரம் எடுத்த நடிகர் அஜித்: ‘அஜித்குமார் ஸ்போர்ட்ஸ் சர்வீஸ்’ பெயரில் புதிய நிறுவனம்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமும், சர்வதேச அளவிலான கார் பந்தய வீரருமான அஜித்குமார், தற்போது திரைத்துறையில்...

24 13
பொழுதுபோக்குசினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் தள்ளிப்போகும் பின்னணி: சூர்யாவுடன் இணைகிறார் எச். வினோத்!

நடிகர் விஜய்யின் கடைசித் திரைப்படமாக அறிவிக்கப்பட்டுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன....

23 11
சினிமாபொழுதுபோக்கு

அரசுப் பள்ளி ஆண்டு விழாக்களில் விஜய் பாடல்களைப் பயன்படுத்தத் தடை: ரசிகர்கள் கடும் அதிர்ச்சி!

தமிழகத் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய், தற்போது தனது முழு நேரத்தையும் அரசியலில் ஈடுபடுத்தி...