பிரபல தெலுங்கு நடிகர் பிரபாஸ் மற்றும் தீபிகா படுகோனே நடிக்கவிருக்கும் அடுத்த படம் புராஜக்ட் கே.
இந்த படத்தை நாக் அஸ்வின் இயக்கி வருகிறார். தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படம் தமிழ் உள்பட வேறு சில மொழிகளில் ரிலீஸ் ஆக உள்ளது.
பெரும் பொருட்செலவில் உருவாகும் இந்த படம் ஒரு சயின்ஸ் பிக்சன் கதையம்சம் கொண்டது என்று கூறப்படுகிறது.
இதில் நடிக்கும் இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் அமிதாப் பச்சன் நடித்து வருகிறார்.
அதுமட்டுமின்றி இந்த படத்தில் ஒரு சில பிரபல நட்சத்திரங்களை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக சூர்யா, மகேஷ்பாபு, துல்கர் சல்மான் ஆகிய மூவரும் இந்த படத்தில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகின்றது.
இது குறித்த அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.
#Suriya #dulquersalmaan #amrithabachchan
Leave a comment