கடந்த சில மாதங்களாக ஜீ தமிழ் டிவியில் ஒளிபரப்பப்பட்டு வந்த ரியாலிட்டி ஷோவான #Survivor தற்போது நிறைவு பெற்றுள்ளது.
ஆக்சன் கிங் அர்ஜுன் தலைமை தாங்கி நடைபெற்று வந்த இந்த நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளார்.
பல்வேறுபட்ட கடுமையான பெட்டிகளைத் தாண்டி, ஆண்களுடன் இறுதிவரை போட்டியிட்டு ஒரு பெண் போட்டியாளர் வெற்றி பெற்றுள்ளார்.
இறுதி போட்டிக்கு விஜயலட்சுமி நேரடியாக தெரிவுசெய்யப்பட்ட நிலையில், வேனசா மற்றும் சரண் ஆகியோர் ஏனைய போட்டியாளர்களாக தெரிவி செய்யப்பட்டனர்.
இவர்களுக்கு வாக்களிக்கும் ஜூரிகளாக நந்தா, அம்ஜத், ஐஸ்வர்யா, நாராயணன், விக்ராந்த், இனிகோ பிரபாகர், உமாபதி ஆகியோர் காணப்பட்டனர். அவர்கள் அளித்த வாக்குகளின் அடிப்படையில் விஜயலட்சுமி 4 ஓட்டுகளையும், சரண் 3 ஓட்டுகளையும் பெற்றனர். மற்றொருபோட்டி வேட்பாளரான வேனசாவுக்கு ஒரு ஓட்டு கூட கிடைக்கவில்லை.
வாக்குகளின் அடிப்படையில், ரைட்டில் வின்னராக விஜயலட்சுமி அர்ஜூனால் அறிவிக்கப்பட்டார். அவருக்கு பரிசுத்தொகையாக ரூபா ஒரு கோடி வழங்கப்பட்டது.
வியஜலட்சுமியின் வெற்றி தொடர்பில் பல நேர்மறையான விமர்சனங்கள் எழுந்தாலும், விஜயலட்சுமி சக போட்டியாளர்களுடன் பங்குபற்றி பல கடுமையான டாஸ்குகளில் வெற்றி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a comment