வாரா வாரம் சீரியல்களில் டாப்பில் ஓடிய தொடர்களின் விவரம் வெளியாகும். நம்பர் 01 போட்டியில் சன் மற்றும் விஜய் தொலைக்காட்சியின் தொடர்கள் தான் அதிகம் இடம்பெறும்.
சமீபத்திய காலமாக பாரதி கண்ணம்மா, ரோஜா போன்ற தொடர்கள் அதிகம் முதல் இடத்தை பிடித்து வந்தன.
இப்போது கடந்த வாரத்தில் டாப்பில் வந்த தொடரின் விவரம் வெளியானது. அதில் எப்போதும் இல்லாத மாற்றமாக சன் தொலைக்காட்சியில் ஓடிக் கொண்டிருக்கும் சுந்தரி சீரியல் தமிழகத்தில் முதல் இடம் பிடித்துள்ளது.
தொடரில் சுந்தரிக்கு தனது கணவரின் இன்னொரு திருமணம் பற்றி விஷயம் தெரிய வர அது படு ஹிட்டாக ஓடியது.
12.13 வீதம் ரீ.ஆர்.பி ரேட்டிங் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
#CinemaNews
Leave a comment