1 41
சினிமாபொழுதுபோக்கு

மதகஜராஜா வெற்றிக்கு பின் சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா

Share

மதகஜராஜா வெற்றிக்கு பின் சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன தெரியுமா

தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களில் ஒருவர் சுந்தர் சி. கடந்த ஆண்டு அரண்மனை 4 திரைப்படத்தின் மூலம் மாபெரும் வெற்றியை பதிவு செய்த இவர், மதகஜராஜா படத்தின் மூலம் இந்த ஆண்டின் முதல் வெற்றியை பதிவு செய்துள்ளார்.

நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என மிகவும் பிஸியாக வலம் வரும் சுந்தர் சி கைவசம் உள்ள படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்.

கேங்கர்ஸ்:
சுந்தர் சி இயக்கத்தில் அவ்னி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பாக குஷ்பு தயாரித்துள்ள திரைப்படம் கேங்கர்ஸ். இப்படத்தில் சுந்தர் சி நடித்தும் உள்ளார். அவருடன் இணைந்து வடிவேலுவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மூக்குத்தி அம்மன் 2:
ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடித்து வெளிவந்த படம் மூக்குத்தி அம்மன். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகத்தை சுந்தர் சி இயக்க உள்ளார். இப்படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது.

கலகலப்பு 3:
சுந்தர் சி இயக்கத்தில் வெளியான கலகலப்பு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதனால் இப்படத்தின் மூன்றாம் பாகம் விரைவில் உருவாக உள்ளது.

அரண்மனை 5:
சுந்தர் சி இயக்கியதில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் தனி இடத்தை பிடித்த படம் அரண்மனை. இதன் 4 – ம் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து 5 – ம் பாகம் எடுக்க முடிவு செய்துள்ளார் சுந்தர் சி. தற்போது, ஸ்கிரிப்ட் தயார் செய்யும் பணியில் இறங்கி உள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...