Dandruff 302eff98 558b 4891 8161 a3f9e13e0026 1024x400 1
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

பொடுகு தொல்லையால் பெரிதும் அவஸ்தையா? இதனை போக்க இதோ சூப்பர் வழி

Share

இன்றைய காலத்தில் பலரும் சந்திக்கும் கூந்தல் பிரச்சினைகளில் முதன்மையானது தான் பொடுகு பிரச்சினை.

இது வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்னை உருவாக முக்கியக் காரணங்கள் ஆகும்.

இவற்றை எளியமுறையில் கூட போக்கலாம். அந்தவகையில் பொடுகை போக்க கூடிய ஒரு சில எளியவழிகளை இங்கே பார்ப்போம்.

  • பேக்கிங் சோடா பொடுகைக் குறைக்கவும் பயன்படுகிறது. தலைமுடிக்கு ஷாம்பு போடும் போது அதனுடன் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்த்து தலையில் நன்றாக மசாஜ் செய்து பின் தலையை அலசவும். இதன் காரணமாக, தலையின் வேர்களில் ஒட்டிக்கொண்டிருக்கும் படிவுகள் பொடுகுத் தொல்லையைப் போக்கும்.
  • ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் சம அளவு எலுமிச்சை சாறு எடுத்து இரண்டு மடங்கு தண்ணீர் கலக்கவும். தயாரிக்கப்பட்ட கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் நிரப்பவும், அதை உங்கள் தலைமுடியில் தெளிக்கவும், 20 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு உங்கள் தலையை கழுவவும். இதனால் பொடுகும் குறையும்.
  • பொடுகு வேர்களில் ஒட்டாமல் இருக்க சீப்பினால் உங்கள் தலைமுடியை லேசாக சீவவும், பின்னர் கற்றாழை ஜெல்லை தலை முழுவதும் நன்கு தடவவும். 20-25 நிமிடங்கள் வைத்திருந்த பிறகு உங்கள் தலையை நன்கு கழுவுங்கள்.
  • ஒரு பாத்திரத்தில் தேங்காய் எண்ணெயை எடுத்து லேசாக சூடாக்கவும். இப்போது எண்ணெய் கொண்டு தலையை நன்றாக மசாஜ் செய்து சுமார் அரை மணி நேரம் வைத்திருந்த பின் தலையை அலசவும். இதனால் உங்கள் உச்சந்தலையில் உள்ள பொடுகை நிச்சயம் குறைக்கலாம்.
  • தேங்காய் எண்ணெய்யில் வெந்தயத்தை ஊற வைத்து, தலை முடியில் தேய்த்தால் ஒரே வாரத்தில் பொடுக்கு குட் பை சொல்லாம். அதே போல், ஊற வைத்த வெந்தயத்துடன், தேங்காய் சேர்த்து பேஸ்ட் போல் அரைத்து அதை தலையில் தேய்த்து குளித்தால் பொடுகு தொல்லை அடியோடு நீங்கும்.
  • பாசிப்பருப்பை அரைத்து அதனுடன் தயிர் கலந்து தலைமுடியில் தடவி 1 மணி ஊற வைக்க வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும்.
  • துளசி, கருவேப்பிலையை அரைத்து எலுமிச்சை பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்துப் பிறகு குளிப்பது நல்லது.
  • அருகம்புல் சாறு எடுத்துத் தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து நன்றாகக் காய்ச்சிப் பின்பு ஆறவைத்துத் தலையில் தேய்க்கலாம்.
  • காய்ந்த வேப்பம்பூ 50 கிராம் எடுத்து, 100 மி.லி. தேங்காய் எண்ணெயில் போட்டு நன்கு காய்ச்ச வேண்டும். இளஞ்சூடு பதத்துக்கு ஆறியதும், வேப்பம்பூவுடன் சேர்த்து எண்ணெயைத் தலையில் தேய்த்து 1/2 மணி நேரத்துக்குப் பிறகு குளிக்க வேண்டும்.
  • சின்னவெங்காயத்தைத் தோலுரித்துச் சுத்தம் செய்து அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை எடுத்துத் தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால், தலைச் சூடு குறைந்து குளிர்ச்சியடையும்.

#LifeStyle

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
f826ae523888053ebb5ed50ee1d53e8269218cef31578
சினிமாபொழுதுபோக்கு

ஜன நாயகன் முன்னோட்டத்திற்குத் திரையரங்குகளில் முன்பதிவு: விஜய் ரசிகர்கள் உற்சாகம்!

ஹெச். வினோத் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் (Trailer) நாளை...

750x450 643120 parasakthi movie
பொழுதுபோக்குசினிமா

சூர்யாவின் ‘பராசக்தி’ படத்திற்குத் தடை விதிக்க நீதிமன்றம் மறுப்பு: 10-ஆம் திகதி வெளியாவது உறுதி!

இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்துள்ள ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டிற்குத் தடை விதிக்கச்...

suresh4 1767331292
பொழுதுபோக்குசினிமா

சல்லியர்கள் படத்திற்குத் திரையரங்குகள் மறுப்பு: நேரடியாக ஓடிடியில் வெளியீடு – சுரேஷ் காமாட்சி காட்டம்!

இயக்குனர் கிட்டு இயக்கத்தில், சுரேஷ் காமாட்சி தயாரிப்பில் உருவான ‘சல்லியர்கள்’ திரைப்படம் திரையரங்குகள் கிடைக்காத காரணத்தால்,...

articles2FqpILCUr6EEqQv1X62MFX
சினிமாபொழுதுபோக்கு

டிமான்ட்டி காலனி 3 ஆரம்பம்: மிரட்டலான பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட படக்குழு!

அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அருள்நிதி நடிப்பில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திகில் திரைப்படமான ‘டிமான்ட்டி...