shutterstock 1727511442
அழகுக் குறிப்புகள்பொழுதுபோக்கு

பொடுகு பிரச்சினையால் அவதியா? இதனை போக்க சில இயற்கைவழிகள் இதோ

Share

இன்றைக்கு பலரும் பொடுகு பிரச்சினையால் அவதிப்பட்டு வருகின்றார்கள்.

ஒழுங்கற்ற பராமரிப்பு, தலைக்கு எண்ணெய் வைக்காமல் இருப்பதினாலும், சரியாக தலை அலசாமல் இருப்பதினாலும், தினமும் தலைக்கு ஷாம்பு போடுவதினாலும் என பல காரணங்களால் பொடுகு வருகின்றது.

இந்த பிரச்சனையை சரிசெய்வதற்கு ஒரு சில இயற்கை வழிகள் உள்ளன. தற்போது அவற்றை பார்ப்போம்.

  • பொடுகு தொல்லை தீர உப்பு, உப்பு தலைமுடியில் இருக்கும் பொடுகை வெளியேற்ற மிகவும் பயன்படுகிறது. எனவே உப்பு இரண்டு ஸ்பூன் எடுத்து கொண்டு, சிறிதளவு தண்ணீரில் கலந்து கொள்ளவும். பின்பு அவற்றை தலைமுடியின் வேர்ப்பகுதியில் மென்மையாக 10-15 நிமிடம் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு மைல்டு ஷாம்பு போட்டு தலை அலச வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை செய்து வந்தால் தலையில் இருக்கும் பொடுகு பிரச்சனை விரைவில் குணமாகும்.
  • பொடுகு தொல்லை தீர வாரத்தில் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து சிறிதளவு தயிர் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்
  • பொடுகு நீங்க எளிய முறை நெல்லிக்காய் பொடி, வெந்தய பொடி மற்றும் சிறிதளவு தயிர் சேர்த்து தலை தேய்த்து சிறிது  நேரம் வைத்திருந்து பின்பு தலை தேய்த்து குளித்து வர பொடுகு தொல்லை நீங்கும்.
  • எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.
  • பொடுகு குணமாக  வினீகர் சமமான அளவில் தண்ணீரையும், வினீகரையும் சேர்த்து ஒரு கலவையை தயாரித்துக் கொள்ளுங்கள்இந்த கலவையை தலைச் சருமத்தில் தடவி, இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலை எழுந்தவுடன் . மிதமான ஷாம்புவால் தலை முடியை அலசுங்கள்.

#dandruff #Hairtips

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
12 1
பொழுதுபோக்குசினிமா

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா திருமணம்: பிரதமர் மோடி நெகிழ்ச்சி வாழ்த்து!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான விஜய் தேவரகொண்டா மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் திருமணத்தை முன்னிட்டு,...

image 1200x800 42
பொழுதுபோக்குசினிமா

கழிப்பறையில் ரகசிய வீடியோ: கன்னட நடிகைக்கு நேர்ந்த அதிர்ச்சி!

பெங்களூருவில் உள்ள மைதானம் ஒன்றில் நடைபெற்ற மூன்று நாள் நட்சத்திர மகளிர் கிரிக்கெட் போட்டியில் (Celebrity...

image 1200x800 15 1
சினிமாபொழுதுபோக்கு

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தா சூர்யா காலி!- படப்பிடிப்பில் நடந்த பகீர் சம்பவம்; சீக்ரெட் உடைத்த கே.எஸ். ரவிக்குமார்!

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான சூர்யா, தற்போது ‘கருப்பு’ திரைப்படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். இந்நிலையில், 2009-ஆம்...

image 1200x800 18
சினிமாபொழுதுபோக்கு

இளையராஜாவுக்குப் பின்னடைவு: 134 படப் பாடல்களைப் பயன்படுத்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை!

இசையமைப்பாளர் இளையராஜா தான் இசையமைத்த பாடல்களின் உரிமையைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ...