நடிகர் அஷ்வின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய பேச்சு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரபல தயாரிப்பாளர் அவருக்கு ஆதரவாக பதிவிட்டுள்ளார். விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் அஷ்வின்.
என்ன சொல்ல போகிறாய் என்ற படத்தின் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமாகிறார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா அண்மையில் சென்னையில் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அஷ்வின், கதை நல்லா இல்லை தூங்கிடுவேன் என்று கூறினார்.
மேலும் இதுவரை 40 கதைகளை கேட்டு தூங்கி இருக்கிறேன் என்றும் படம் நல்லா இல்லை என்றால் ரிலீஸ் பண்ண மாட்டேன் என்றும் பேசியிருந்தார். அவரது இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இன்னும் ஒரு படம் கூட அவரது நடிப்பில் ரிலீஸ் ஆகாத நிலையில் இந்த பேச்சு தேவைதானா என்று பலரும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பாக பல மீம்கள் வெளியிடப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து தனது பேச்சு குறித்து மீடியாக்களுக்கு விளக்கம் கொடுத்தார் அஷ்வின். அதில், இது தான் எனக்கு கிடைத்த முதல் பட வாய்ப்பு. அத்தனை பெரிய இசை வெளியீட்டு விழா மேடையை இதுவரை கனவில் கூட நினைத்து பார்த்தது கிடையாது.
மேடையில் நிற்கும் போது பெரும் பதற்றமாகி விட்டது. அந்த பதற்றத்தில் தான் அப்படி பேசி விட்டேன். இதுவரை நான் 40 கதைகள் கேட்டதே இல்லை. அடித்துவிடுவோம் என பேசி விட்டேன். அந்த பேச்சு இந்த அளவுக்கு எனக்கே பின் விளைவுகளை கொடுக்கும் என கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை என்று விளக்கம் கொடுத்தார் அஷ்வின்.
#cinema
Leave a comment