tamilni 165 scaled
சினிமாபொழுதுபோக்கு

நடிச்சதெல்லாம் போதும்.. இனி பிசினஸ் தான்.. சினேகாவின் மாஸ் திட்டம்..!

Share

நடிச்சதெல்லாம் போதும்.. இனி பிசினஸ் தான்.. சினேகாவின் மாஸ் திட்டம்..!

நடிகை சினேகா திருமணத்திற்கு பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்துக் கொண்ட நிலையில் தற்போது வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடந்து வருகிறார். இந்த நிலையில் தற்போது முழுக்க முழுக்க அவர் பிசினஸில் ஈடுபட போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் புன்னகை அரசி நடிகைகளில் ஒருவரான சினேகா, கடந்த 2000 ஆண்டு முதல் நடித்து வருகிறார். ’இனியவளே’ என்ற தமிழ் திரைப்படத்தில் முதன்முதலாக நடித்த நிலையில் அதன் பிறகு ’ஆனந்தம்’, ’பார்த்தாலே பரவசம்’, ’பம்மல் கே சம்பந்தம்’, ’புன்னகை தேசம்’, ’விரும்புகிறேன்’ உள்பட பல திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார். குறிப்பாக அவர் நடித்த ’ஆட்டோகிராப்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது.

இந்த நிலையில் கடந்த 2012 ஆம் ஆண்டு நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்த பின்னர் அவர் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து விட்டார். அதன் பின்னர் வருடத்திற்கு அதற்கு ஒன்று அல்லது இரண்டு படங்களில் மட்டுமே நடந்து வரும் நிலையில் தற்போது அவர் விஜய் நடித்துவரும் ’கோட்’ என்ற படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் தற்போது வந்துள்ள தகவலின் படி நடிகை சினேகா புதிய பிசினஸ் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினேகாலயா சில்க்ஸ் என்ற துணிக்கடையை அவர் ஆரம்பிக்க இருப்பதாகவும் இதற்கான பணிகள் முடிவடைந்து திறப்பு விழாவிற்கு தயாராக இருப்பதாகவும் தெரிகிறது.

இந்த துணிகடை பிப்ரவரி 12ஆம் தேதி திறப்பு விழா காண இருக்கும் நிலையில் இதற்கான அழைப்பிதழ்களை பிரபலங்களுக்கு அவர் அனுப்பி வைத்து வருகிறார். இந்த கடை திறந்த பிறகு அவர் முழுக்க முழுக்க பிசினஸில் கவனம் செலுத்துவார் என்றும் சினேகாலயா சில்க்ஸ் என்ற துணிக்கடையில் பல்வேறு விதமான பட்டு புடவைகள் இருக்கும் என்றும் கூறப்படுகிறது.

Share
தொடர்புடையது
25 688e26468e8e8
சினிமாசெய்திகள்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு காலமானார்

தென்னிந்திய நகைச்சுவை நடிகர் மதன் பாபு உடல்நலக் குறைவால் காலமானார். அவர் தனது 71ஆவது வயதில்...

9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...