அஜித் நடித்த வாலி, விஜய்யின் குஷி ஆகிய வெற்றி படங்களை இயக்கி பிரபலமான எஸ்.ஜே.சூர்யா, பின்னர் கதாநாயகனாக நடிக்க தொடங்கினார். தற்போது அவருக்கு பல படங்களில் வில்லன் வேடங்கள் குவிகின்றன.
சமீபத்தில் வெளியான மாநாடு, டான் படங்களில் நடித்த எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டது. மேலும் இவர் கைவசம் தற்போது ‘பொம்மை’, ‘மார்க் ஆண்டனி’ மற்றும் ‘ஆர்சி 15’ படங்கள் உள்ளது.
தொடர்ந்து இவர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில் ‘வதந்தி’ எனும் புதிய வெப் தொடரில் நடித்துள்ளார். புஷ்கர் – காயத்ரி தயாரித்துள்ள இந்த வெப் தொடர் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில் உருவாகியுள்ளது. இந்நிலையில், இதன் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
அதன்படி, ‘வதந்தி’ வெப் தொடர் வருகிற டிசம்பர் 2-ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது. இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ள நடிகர் எஸ்.ஜே.சூர்யா, “இது என்னை பற்றிய வதந்தி அல்ல” என பதிவிட்டுள்ளார். இந்த போஸ்டர் தற்போது ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.
#cinema
Leave a comment