சிவசங்கர் மாஸ்டருக்கு உதவத் தயார்: தாராள மனதுடன் உதவ முன்வந்த சோனு சூட்

இயக்குனராகவும், நடிகராகவும் திகழ்ந்த நடன இயக்குனராகவும் திகழ்ந்தவர் சிவசங்கர் மாஸ்டர். கொரோனாத் தொற்று காரணமாக பாதிக்கப்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.அவரது சிகிச்சைக்கு தேவையான பணத்தை கொடுத்து உதவுவதற்கு பிரபல நடிகர் சோனு சூட் உதவ முன்வந்துள்ளார்.

சிவசங்கர் மாஸ்டர் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணிபுரிந்து இருக்கிறார்.

மேலும், ஜப்பனீஸ் உட்பட 10 மொழிகளில் சிவசங்கர் மாஸ்டர் நடன இயக்குனராகப் பணியாற்றி இருக்கிறார்.

இந்தநிலையில் சமீபகாலமாக இவருக்கு நடனத்திலும், நடிப்பிலும் வாய்ப்புகள் குறைந்தநிலையில், கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த அவர், மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சைக்கான செலவுகள் அதிகமாகும் என மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால், சிகிச்சைக்கான கட்டணத்தை அவருடைய குடும்பத்தினரால் செலுத்த முடியவில்லை. இந்நிலையில் என்னுடைய அப்பா உயிருக்கு ஆபத்தான நிலையில் இருக்கிறார்.

எங்களிடம் சிகிச்சைக்கு தேவையான பணம் இல்லை. அதனால் அவருக்கு தயவுசெய்து உதவுங்கள் என்று சிவசங்கர் பாபாவின் மகன் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

sivashankar

இந்த வீடியோவைப் பார்த்த சிவசங்கர் பாபாவிற்கு பிரபல நடிகர் சோனு சூட் உதவ முன்வந்துள்ளார்.

#CinemaNews

Exit mobile version