23 657c235476291
சினிமாபொழுதுபோக்கு

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி !!

Share

சிவகார்த்திகேயனின் அடுத்த ஜோடி !!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருக்கும் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் மற்றும் எஸ் கே 23 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் அமரன் படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பை முடித்தவுடன் எஸ்கே 23ல் நடிக்கவுள்ளார். ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக கன்னட திரையுலகம் மூலம் பிரபலமான இளம் நடிகை ருக்மிணி வசந்த் நடித்து வருகிறார்.

ஆனால், இப்படத்தில் முதன் முதலில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கவிருந்தது ராஷ்மிகா மந்தனா தானாம். அப்போது ராஷ்மிகாவின் கால்ஷீட் கிடைக்காத காரணத்தினால் அவருக்கு பதிலாக ருக்மிணி தேர்வாகியுள்ளார் என கூறப்படுகிறது.

சிவகார்த்திகேயன் அடுத்ததாக டான் படத்தை இயக்கிய இயக்குனர் சிபி சக்ரவத்தி இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது. இதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறதாம்.

இந்த நிலையில், இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க ராஷ்மிகாவை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவலை பிரபல பத்திரிகையாளர் பிஸ்மி பகிர்ந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share
தொடர்புடையது
articles2FwqhzkT2Bra4FSu7ASf7Q
பொழுதுபோக்குசினிமா

சிவகார்த்திகேயனின் அமரன் திரைப்படம்: கேரளாவில் விருது; கோவாவில் சர்வதேச திரைப்பட விழாவில் தொடக்கத் திரையிடல்!

ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த ‘அமரன்’ திரைப்படம்,...

images 1
பொழுதுபோக்குசினிமா

மாஸ் அப்டேட்: விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில்!

நடிகர் விஜய் நடிப்பில், இயக்குநர் எச். வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ (Jananayakan) திரைப்படத்தின் இசை...

RKFI scamers
சினிமாபொழுதுபோக்கு

ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் எச்சரிக்கை: வாய்ப்பு வாங்கித் தருவதாக வரும் மோசடிகளை நம்ப வேண்டாம்!

நடிகர் கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் (RKFI), தங்கள் நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில்...

images
சினிமாபொழுதுபோக்கு

தெலுங்கு இயக்குநர் மீது நடிகை திவ்யபாரதி பாலியல் ரீதியான அவமதிப்புக் குற்றச்சாட்டு: நடிகர் மௌனம் கலைந்தது ஏன்?

சமீபத்தில் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தில் ஜி.வி.பிரகாஷ் குமாருடன் நடித்த நடிகை திவ்யபாரதி, தெலுங்கில் தான் அறிமுகமாகும் ‘கோட்’...