24 6629e1758b07c
சினிமாபொழுதுபோக்கு

மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்

Share

மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் தற்போது அமரன் மற்றும் எஸ்.கே. 23 திரைப்படங்கள் உருவாகி வருகிறது.

ராஜகுமாரி பெரியசாமி இயக்கத்தில் உண்மை கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் திரைப்படம் தான் அமரன். இப்படத்தில் ராணுவ வீரராக நடிக்கிறார் சிவா. மேலும் சாய் பல்லவி இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

கமல் ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான ஏ.ஆர். முருகதாஸுடன் முதல் முறையாக சிவகார்த்திகேயன் இணைந்துள்ள திரைப்படம் எஸ்.கே 23. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கன்னடத்தில் வெளிவந்த ஏழு கடல் படத்தின் மூலம் பிரபலமான நடிகை ருக்மிணி தான் இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடிக்கவுள்ள புதிய படம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டான் எனும் திரைப்படத்தை இயக்கி மாபெரும் வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் சிபி சக்ரவத்தி.

இப்படத்திற்கு பின் இவர் ரஜினியை வைத்து இயக்க போகிறார் என கூறப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை. இப்படியிருக்க மீண்டும் சிவகார்த்திகேயனை வைத்து இயக்கப்போகிறாராம் சிபி. அதற்கான வேலைகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

மாபெரும் வெற்றி கொடுத்த இயக்குனருடன் மீண்டும் இணையும் சிவகார்த்திகேயன்.. சூப்பர்ஹிட் கூட்டணி | Sivakarthikeyan New Movie With Superhit Director

Share
தொடர்புடையது
Spider Man
சினிமா

முன்பதிவிலேயே கோடிகளை குவிக்கும் Spider Man!

ஸ்பைடர் மேன் ‘தி ஒடிசி’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றியை தொடர்ந்து உலக சினிமா ரசிகர்கள் அனைவரும்...

india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...