24 66fa596be0b44
சினிமாபொழுதுபோக்கு

அன்று இசையமைப்பாளர்கள், இன்று தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்.. யார் தெரியுமா

Share

அன்று இசையமைப்பாளர்கள், இன்று தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்.. யார் தெரியுமா

சினிமாவில் பல திறமைகளை கொண்டுள்ள நட்சத்திரங்கள் பலர் உள்ளனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக இருந்து தற்போது, முன்னணி நடிகர்களாக பல ரசிகர்களை சம்பாதித்து புகழின் உச்சத்தில் வலம் வரும் நடிகர்கள் குறித்து கீழே காணலாம்.

ஹிப்ஹாப் ஆதி விஷால் நடிப்பில் வெளியான “ஆம்பள” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, பல இசை ஆல்பங்களை உருவாக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகனாகவும், இயக்குனராகவும் வலம் வந்தார். தற்போது, சமீபத்தில் இவர் நடிப்பில் “கடைசி உலகப் போர்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி “சுக்கிரன்” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, பல படங்களில் இசையமைத்து உள்ளார்.

இசையமைப்பாளராக ஜொலித்து கொண்டிருந்த இவர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளியான “நான்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இந்த ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் “ரோமியோ”, “மழை பிடிக்காத மனிதன்” மற்றும் “ஹிட்லர்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...