24 66fa596be0b44
சினிமாபொழுதுபோக்கு

அன்று இசையமைப்பாளர்கள், இன்று தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்.. யார் தெரியுமா

Share

அன்று இசையமைப்பாளர்கள், இன்று தமிழ் சினிமா முன்னணி நடிகர்கள்.. யார் தெரியுமா

சினிமாவில் பல திறமைகளை கொண்டுள்ள நட்சத்திரங்கள் பலர் உள்ளனர்.

அந்த வகையில், தமிழ் சினிமாவில் முதலில் இசையமைப்பாளராக இருந்து தற்போது, முன்னணி நடிகர்களாக பல ரசிகர்களை சம்பாதித்து புகழின் உச்சத்தில் வலம் வரும் நடிகர்கள் குறித்து கீழே காணலாம்.

ஹிப்ஹாப் ஆதி விஷால் நடிப்பில் வெளியான “ஆம்பள” திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். அதை தொடர்ந்து, பல இசை ஆல்பங்களை உருவாக்கி தனக்கென தனி ரசிகர் கூட்டத்தை சம்பாதித்து ஹிப்ஹாப் தமிழா ஆதி என்று ரசிகர்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.

இசையமைப்பாளராக மட்டுமில்லாமல் “மீசைய முறுக்கு” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகனாகவும், இயக்குனராகவும் வலம் வந்தார். தற்போது, சமீபத்தில் இவர் நடிப்பில் “கடைசி உலகப் போர்” என்ற திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

விஜய் ஆண்டனி “சுக்கிரன்” என்ற திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து, பல படங்களில் இசையமைத்து உள்ளார்.

இசையமைப்பாளராக ஜொலித்து கொண்டிருந்த இவர் ஜீவா ஷங்கர் இயக்கத்தில் வெளியான “நான்” என்ற திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

இந்த ஆண்டில் மட்டும் இவர் நடிப்பில் “ரோமியோ”, “மழை பிடிக்காத மனிதன்” மற்றும் “ஹிட்லர்” ஆகிய படங்கள் வெளிவந்துள்ளது.

 

Share
தொடர்புடையது
Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 10
சினிமாசெய்திகள்

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. லிஸ்ட் இதோ

2023 – ம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்கள் என்னென்ன என்பதை குறித்து கீழே காணலாம்....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 9
சினிமாசெய்திகள்

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த தமிழ் திரைப்படங்கள்.. ஒரு சிறப்பு பார்வை

2021ஆம் ஆண்டு வெளிவந்த சிறந்த திரைப்படங்களை பற்றி இந்த பதிவில் காணலாம் வாங்க. இயக்குனர் லோகேஷ்...

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 8
சினிமாசெய்திகள்

ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை ஊர்வசியின் அந்த புகைப்படம்.. இணையத்தில் வைரல்

முன்பு தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளில் ஒருவர் நடிகை ஊர்வசி....

Untitled 1 Recovered Recovered Recovered Recovered Recovered 7
சினிமாசெய்திகள்

ரசிகர்களுடன் தான் நடித்த குபேரா படத்தை கண்டுகளித்த தனுஷ்.. எமோஷ்னல் வீடியோ

தமிழ் சினிமாவில் தனது பயணத்தை துவங்கி இன்று ஹாலிவுட் வரை சென்றிருக்கிறார் தனுஷ். நடிகர், இயக்குநர்,...