இந்தியாவின் நைட்டிங்கேல் என அழைக்கப்படும் பழம் பெரும் பாடகி லதா மங்கேஷ்கர் கொவிட்-19 தொற்றுக்குள்ளாகியுள்ளார்.
இதையடுத்து பாடகி மும்பையில் உள்ள ப்ரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல் நிலையை மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர்.
லதா மங்கேஷ்கர், தாதாசாகேப் பால்கே விருது மற்றும் பிரான்சின் உயரிய விருது, உள்பட பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச விருதுகளை பெற்றுள்ளார். 1948 முதல் 1974 க்கு இடையில் 25,000 பாடல்களுக்கு மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார்.
#CinemaNews
Leave a comment