simbu 0
சினிமாபொழுதுபோக்கு

வாரிசுடன் இணைந்த சிம்பு – எதிர்பார்ப்பில் ரசிகர்கள்

Share

வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து வரும் ‘வாரிசு’ திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாக உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா நடித்து வருகிறார். மேலும், பிரகாஷ்ராஜ், சரத்குமார், குஷ்பூ, ஷாம், யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தீபாவளி தினத்தன்று ‘வாரிசு’ திரைப்படத்தின் போஸ்டரை வெளியிட்டு, சங்கராந்திக்கு திரைப்படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது. இப்படத்தின் முதல் பாடலான ‘ரஞ்சிதமே’ பாடலை கடந்த 5-ம் தேதி படக்குழு வெளியிட்டது. இப்பாடல் 60 மில்லியன் பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ‘வாரிசு’ படத்தின் அடுத்த பாடல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தில் நடிகர் சிம்பு பாடல் ஒன்றை பாடியுள்ளதாகவும் இந்த பாடலை படக்குழு அடுத்த மாதம் வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இது உண்மையானால் இந்த பாடல் மிகப்பெரும் ஹிட்டாகும் என்று ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

#cinema

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
9
சினிமாசெய்திகள்

பிக்பாஸ் புகழ் ஷாரிக்கிற்கு குழந்தை பிறந்தது.. அவரே வெளியிட்ட குழந்தையின் வீடியோ

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வந்தவர்கள் உமா ரியாஸ் மற்றும் ரியாஸ் கான் ஜோடி....

8
சினிமாசெய்திகள்

சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி நடிகர்.. பிரம்மாண்டமாக ஒரே நாளில் வெளியாகும் இரண்டு படங்கள்

ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் திரைப்படம் மதராஸி. இப்படத்தில் சிவகார்த்திகேயனுடன்...

7 1
சினிமாசெய்திகள்

சிங்கப்பெண்ணே எதிர்பார்க்காத ட்விஸ்ட்! ஆனந்தி – அன்பு திருமணமா? ப்ரோமோ பாருங்க

சன் டிவியின் டாப் சேரியல்களில் ஒன்றாக இருந்து வரும் சிங்கப்பெண்ணே சீரியலில் தற்போது ஆனந்தி தனது...

6 2
சினிமாசெய்திகள்

6 நாட்களில் மார்கன் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவரான விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த வாரம் திரைக்கு வந்த...