சிம்பு நடிகர் மட்டுமின்றி சிறந்த பாடகர் என்பதும் தனது படத்தில் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களிலும் பாடி வருகிறார்.
இந்தநிலையில் சிம்பு தனது நெருங்கிய நண்பர்களில் ஒருவரான மகத் நடிக்கும் பாலிவுட் படமான ’டபுள் எக்ஸெல்’ என்ற திரைப்படத்தில் ஒரு பாடலை பாடியுள்ளார்.
இந்த பாடலை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ள சிம்பு ’எனது நண்பர் மகத் அவர்களுக்காக பாலிவுட் திரையுலகில் நான் அறிமுகமாகி ஒரு பாடலை பாடி உள்ளேன்.
அந்த பாடல் அனைவருக்கும் பிடிக்கும் என்று நம்புகிறேன். படக்குழுவினர் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்த பாடலின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.
#Simbu
Leave a comment