5 3
சினிமாபொழுதுபோக்கு

உதவி கேட்டு நிற்காதீர்கள், வாழ்நாள் முழுவதும் பிரச்சனை.. செல்வராகவன் வருத்தம்

Share

காதல் கொண்டேன் என்ற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானவர் செல்வராகவன். அதன் பின், இவர் 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, மயக்கம் என்ன, ஆயிரத்தில் ஒருவன் மற்றும் இரண்டாம் உலகம் போன்ற பல திரைப்படங்களை இயக்கி பிரபலமானார்.

இதில், மயக்கம் என்ன திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று கொடுத்தது. குறிப்பாக, அந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக ரிச்சா லங்கெல்லா யாமினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தது இன்றும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக வலம் வரும் செல்வராகவன். படம் குறித்த அப்டேட் மற்றும் ரசிகர்களுக்கு பயன் தரும் வகையில் பல விஷயங்களை பதிவிட்டு வருவார்.

இந்நிலையில், தற்போது செல்வராகவன் மக்களுக்கு அறிவுரை கூறும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதில், ” ஒரு இலட்சியத்தை அடைய நினைப்பது நல்ல விஷயம் தான். ஆனால் அதை செய்ய போகிறேன் என்பதை பற்றி யாரிடமும் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை.

எதற்காகவும் யாரிடமும் உதவி கேட்டு நிற்காதீர்கள். நீங்கள் உதவி கேட்டு பிறர் செய்து கொடுத்து விட்டால், அதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் சொல்லி காட்டுவார்கள்” என்று கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...

Untitled 26
பொழுதுபோக்குசினிமா

விஜய் எனது தம்பி; ஆனால் போட்டி திமுக – அதிமுக இடையேதான்: சுந்தர் சி பேச்சு!

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது...