தேடலும் துணிச்சலும் வீண் போகாது! – வாழ்த்து மழையில் விஜய் சேதுபதி

202201161608250922 Tamil News Tamil cinema actor kamalhaasan wishes to vijay sethupathi SECVPF

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் நடிகர் விஜய் சேதுபதி.

நடிகர் விஜய் சேதுபதி தனது பிறந்தநாளை இன்று கொண்டாடிய நிலையில், பிரபலங்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், உலகநாயகன் கமல்ஹாசன் விஜய் சேதுபதி சேதுபதிக்கு தனது சமூக வலைத்தளத்தில் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

உலகநாயகனின் குறித்த வாழ்த்தை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

உலகநாயகன் தனது வாழ்த்து செய்தியில், “சந்தையின் பின்னே போகாமல் தனக்கென ஒரு தேடலைக் கொண்டவர் தம்பி விஜய் சேதுபதி. கதையின் நாயகனாகத் தன்னை முன்னிறுத்திக்கொள்ளும் அடுத்த தலைமுறையின் முக்கியமான நடிகர். அவரது தேடலும் துணிச்சலும் வீண்போகாது. தம்பி விஜய்சேதுபதிக்கு என் மனமார்ந்த பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்” என தனது வாழ்த்துகளை விஜய் சேதுபதிக்கு தெரிவித்துள்ளார்.

சினிமாவில் தடம் பாதிக்க வேண்டும் என்ற முழு முயற்சியில் திரைத்துறைக்குள் காலடி எடுத்து வைத்தவர் நடிகர் விஜய் சேதுபதி. சிறு சிறு கதாபாத்திரங்களில் தோன்றி, முன்னணி கதாநாயகனாக வளர்ந்து நிற்பவர் விஜய் சேதுபதி. கதாநாயகனாக மட்டுமல்லாது வில்லனாகவும் முத்திரை பதித்து வருபவர் என்பது குறிப்பிடத்தக்கது.

#CinemaNews

Exit mobile version