24 65c5cc9383de0
சினிமாபொழுதுபோக்கு

சமந்தாவுடன் நடிக்க போட்டோ போட்டி போடும் 5 நடிகர்கள்

Share

சமந்தாவுடன் நடிக்க போட்டோ போட்டி போடும் 5 நடிகர்கள்

நடிகை சமந்தா கடைசியாக கடந்த 2022 ஆம் ஆண்டு வெளியான ’காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற நேரடி தமிழ் திரைப்படத்தில் நடித்த பிறகு அதன் பிறகு இரண்டு ஆண்டுகளாக அவர் தமிழ் திரையுலகம் பக்கம் திரும்பவில்லை. இடையில் அவர் உடல் நல கோளாறு காரணமாக சில மாதங்கள் நடிக்காமல் இருந்த நிலையில் தற்போது தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தான் கவனம் செலுத்தி வருவதாக கூறப்பட்டது.

இந்த நிலையில் தான் அறிமுகமான தமிழ் திரை உலகில் மீண்டும் ஒரு மாஸ் படத்தில் நடிக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள சமந்தா பிரபல தமிழ் இயக்குனர்களிடம் கதை கேட்டு வருவதாக கூறப்படுகிறது. என்னதான் பாலிவுட், டோலிவுட் என கொடிகட்டி பறந்தாலும் தமிழில் ஒரு அட்டகாசமான படத்தை கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ள சமந்தா ஹீரோயின் சார்ந்த கதைகள் வேண்டாம் என்று இயக்குநர்களிடம் கறாராக கூறி விட்டதாக தெரிகிறது. பக்கா மாஸ் கதையாக ஒரு கமர்ஷியல் படமாக இருக்க வேண்டும் என சமந்தா கூறியிருக்கும் நிலையில் அவரது விருப்பப்படி அவருக்கு இயக்குநர்கள் கதை சொல்லி வருகின்றனர்.

இந்த நிலையில் சமந்தா மீண்டும் தமிழில் நடிக்க வருகிறார் என்ற விஷயத்தை கேள்விப்பட்ட ஐந்து முன்னணி நடிகர்கள் அவருடன் நடிக்க ஆர்வம் காட்டி வருவதாகவும் தங்களது அடுத்த படத்தில் நாயகியாக நடிக்க வாருங்கள் என அழைப்பு விடுத்து வருவதாக கூறப்படுகிறது. அஜித், விஜய் தவிர முன்னணியில் இருக்கும் 5 நடிகர்கள் சமந்தாவுடன் நேரடியாக போனில் பேசி தங்கள் படத்தில் ஹீரோயின் ஆக நடிக்க அழைப்பு விடுத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 5 நடிகர்கள் சமந்தாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில் சமந்தாவின் ரீஎண்ட்ரி படத்தின் ஹீரோ யார் என்பதை அவரே டிக் செய்வார் என்றும், சமந்தாவின் அடுத்த தமிழ் படம் குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Share
தொடர்புடையது
world 152
சினிமாபொழுதுபோக்கு

‘ஜனநாயகன்’ படக் கசிவு: தென்னிந்திய நடிகர் சங்கம் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் ‘ஜனநாயகன்’ திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் சட்டவிரோதமாகக் கசிந்ததற்குத் தென்னிந்திய நடிகர்...

world 148
பொழுதுபோக்குசினிமா

யூடியூபில் 10 கோடி பார்வைகளைக் கடந்த ‘முட்ட கலக்கி’ பாடல்: ‘யூத்’ படத்தின் அசுர வசூல் சாதனை!

நடிகர் கென் கருணாஸ் இயக்கி, கதாநாயகனாக நடித்த ‘யூத்’ (Youth) திரைப்படம் வசூலில் சாதனை படைத்து...

world 137
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் இணையத்தில் கசிவு: 6 பேர் கைது – சைபர் க்ரைம் அதிரடி!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், முன்னணி நடிகருமான விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் இணையதளங்களில் சட்டவிரோதமாகக்...

world 104
சினிமாபொழுதுபோக்கு

பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே காலமானார்: இந்திய இசையுலகில் ஒரு சகாப்தம் நிறைவு!

இந்தியத் திரையுலகின் ஈடுஇணையற்ற குரல்களில் ஒன்றான புகழ்பெற்ற பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே (92), மாரடைப்பு...