9
சினிமாசினிமாபொழுதுபோக்கு

இரண்டாவது குழந்தை பெற ஆசைப்படும் ரோபோ ஷங்கர்

Share

இரண்டாவது குழந்தை பெற ஆசைப்படும் ரோபோ ஷங்கர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான காமெடி ஷோவில் பங்குபற்றி ரசிகர்கள் மத்தியில் பிரபல்யமானவர் தான் ரோபோ ஷங்கர். இதனை அடுத்து மாரி திரைப்படத்தின் மூலம் சினிமாவில் என்ட்ரி கொடுத்தார்.தொடர்ந்து ரஜினி, அஜித்,தனுஷ் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் நடித்து தனக்கென ஓர் அடையாளத்தை உருவாக்கிக் கொண்டார்.

படங்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அண்மையில் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்தச் சூழலில் தனக்கு மஞ்சள் காமாலை வந்ததாக ரோபோவே ஒத்துக்கொண்டார்.

தனக்கு மஞ்சள் காமாலை வந்துவிட்டதாக ரோபோ ஷங்கர் ஒத்துக்கொண்டதை அடுத்து குடியால்தான் வந்தது என பலரும் பேச ஆரம்பித்தனர். ஆனால், இது எல்லோருக்கும் வரும் நோய்தான். எனக்கு இந்த நோய் சிறு வயதில் ஏற்கனவே ஒருமுறை வந்திருக்கிறது. இந்த நோய் எனக்கு மீண்டும் வந்ததன் மூலம் எனது கதை முடிந்துவிட்டதாகவே பலரும் நினைத்தனர் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறியிருந்தார்.

இந்நிலையில் வனிதா விஜயகுமாருக்கு ரோபோ ஷங்கரும் அவரது மனைவியும் சமீபத்தில் பேட்டி ஒன்று அளித்திருந்தனர். அதில், “எனது மகள் இந்திரஜாவுக்கு 21 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் முடிவு செய்திருக்கிறோம். எங்கள் உறவிலேயே மாப்பிள்ளை பார்த்திருக்கிறோம். அவரும் சினிமாவில்தான் இருக்கிறார். கார்த்திக் சுப்புராஜிடம் உதவி இயக்குநராக இருக்கும் அவர் சில ஹீரோக்களிடம் கதையும் சொல்லிவருகிறார்.

எனக்கும் 21 வயதில்தான் திருமணம் நடைபெற்றது. இந்திரஜாவிடம் இந்தத் திருமணத்திற்கு சம்மதமா என கேட்டோம். அதற்கு அவர், சம்மதம் என தெரிவித்துவிட்டார். அதுமட்டுமின்றி என்னை அவர் நன்றாகவே புரிந்துகொண்டார். அதனால் எனக்கு ரொம்பவே சம்மதம் என தெரிவித்துவிட்டார். விரைவில் திருமணம் நடக்கவிருக்கிறது. நாங்களே அதுகுறித்து அறிவிப்போம்” என்றார்

அவரைத் தொடர்ந்து பேசிய ரோபோ ஷங்கர், “எனக்கு பேர குழந்தைகளை கொஞ்ச வேண்டும் என்று ஆசையாக இருக்கிறது. அவர்களை தூக்கிக்கொண்டு பல நிகழ்ச்சிகளுக்கு போகவும் எனக்கு விருப்பம். அதுமட்டுமின்றி எனக்கும் இரண்டாவது குழந்தை பெற்றுக்கொள்ள் ஆசையாகத்தான் உள்ளது. ஆனால் நைட் ஷூட்டிங் நிறைய முறை போய்விடுகிறேன்” என ஜாலியாக தெரிவித்தார்  என்பதும் குறிப்பிடத்தக்கது.

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

தொடர்புடையது
Screenshot 2026 04 09 222850
செய்திகள்சினிமா

விஜய்யின் ‘ஜனநாயகன்’ படக் கசிவு: ரஜினிகாந்த், கமல்ஹாசன் கடும் கண்டனம்!

நடிகர் விஜய்யின் இறுதித் திரைப்படமாகக் கருதப்படும் ‘ஜனநாயகன்’ இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை...

Untitled 37
பொழுதுபோக்குசினிமா

திருமண பந்தத்தில் இணைந்தார் நடிகை ஜனனி: துபாய் விமானியை கரம் பிடித்த ‘தெகிடி’ நாயகி!

பிரபல தமிழ் மற்றும் மலையாளத் திரைப்பட நடிகை ஜனனி, தனது நீண்ட நாள் காதலரான சாய்...

Untitled 28
பொழுதுபோக்குசினிமா

மீண்டு வரும் “இயக்குநர் இமயம்”: பாரதிராஜாவின் தற்போதைய நிலை குறித்து மருத்துவர்கள் உற்சாக தகவல்!

தமிழ் சினிமாவின் அடையாளமாகத் திகழும் மூத்த இயக்குநர் பாரதிராஜா, கடந்த சில மாதங்களாகத் தீவிர உடல்நலக்...

Untitled 27
சினிமாபொழுதுபோக்கு

விஜய்யின் சொத்து விவரங்கள்: மனைவி சங்கீதாவின் சொத்துகள் மற்றும் முரண்பாடுகள் குறித்த அரசியல் விவாதம்!

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக பெரம்பூர் தொகுதியில் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ள தமிழக வெற்றிக் கழகத் தலைவர்...