24 668bacf2342a9
சினிமாபொழுதுபோக்கு

காஞ்சனா 4 குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்.. மாஸ் அப்டேட்

Share

காஞ்சனா 4 குறித்து பேசிய ராகவா லாரன்ஸ்.. மாஸ் அப்டேட்

ராகவா லாரன்ஸ் என்றால் நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் படம் காஞ்சனா தான். முனி படத்தில் துவங்கி காஞ்சனா 3 வரை அனைத்து திரைப்படங்களும் சூப்பர்ஹிட்டாகியுள்ளது.

காஞ்சனா 4 வரும் என காஞ்சனா 3 படத்தின் இறுதியிலேயே ராகவா லாரன்ஸ் கூறியிருந்தார். அதே போல் பல பேட்டிகளிலும் அதற்கான வேலைகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார்.

கடந்த சில வாரங்களுக்கு முன் காஞ்சனா 4 திரைப்படம் குறித்து பல சில தகவல்கள் இணையத்தில் வைரலானது. இதில் இப்படத்தில் கதாநாயகியாக சென்சேஷனல் நடிகை மிருணால் தாகூர் நடிக்கிறார் என பேசப்பட்டது.

ஆனால், அதன்பின் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் தளத்தில் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம். காஞ்சனா 4 குறித்து படக்குழுவிடம் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகள் வெளிவரும் என கூறியிருந்தார்.

இந்த நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர்கள் ராகவா லாரன்ஸ் இடம் அடுத்தடுத்த படங்கள் குறித்து கேள்வி எழுப்பினார்கள். அதற்கு பதிலளித்த ராகவா லாரன்ஸ் “தற்போது பென்ஸ் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறேன். காஞ்சனா 4 கதையை எழுதி முடித்திருக்கிறேன். படப்பிடிப்பு விரைவில் துவங்கும்” என கூறியுள்ளார்.

Share
தொடர்புடையது
india 8
சினிமாபொழுதுபோக்கு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: முழு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான ‘இயக்குநர் இமயம்’ பாரதிராஜா காலமானதைத் தொடர்ந்து, அவரது உடலுக்குத் தமிழக...

india 2
சினிமாபொழுதுபோக்கு

பழம்பெரும் தமிழ் திரைப்பட இயக்குநர் பாரதிராஜா காலமானார்

திரைப்பட உலகின் முன்னணி இயக்குநரும், ‘இயக்குநர் இமயம்’ என்று அன்போடு அழைக்கப்படுபவருமான பாரதிராஜா, தனது 84வது...

image 12
சினிமாபொழுதுபோக்கு

தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சை குறித்து நடிகர் ரவி மோகன் செய்தியாளர்கள் சந்திப்பில் விளக்கம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ரவி மோகன் (முன்னர் ஜெயம் ரவி), தனது மனைவி ஆர்த்தி...

image 2
சினிமாபொழுதுபோக்கு

என் எதிர்கால லட்சியம் இதுதான்: மனம் திறந்த நடிகை மமிதா பைஜூ

தமிழில் ‘டியூட்’, ‘கர’ போன்ற திரைப்படங்களில் நடித்துப் புகழ்பெற்ற மலையாள நடிகை மமிதா பைஜூ, தற்போது...