சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாநாடு’ படம் வெளியாவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது.
வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘மாநாடு.
இப்படத்தின் படப்பிடிப்புகள், பின்னணி வேலைகள் முடிந்து படத்தினை வெளியிடுவது குறித்த திகதியும் அறிவிக்கப்பட்ட நிலையில் மாநாடு படமானது வெளியாவதில் தாமதம் ஏற்பட்டது.
இறுதியாக நவம்பர் 25 ஆம் திகதி வெளியாகும் என அறிவித்து, அதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்தன.
இந்நிலையில், மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்று தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அறிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘நிறைய கனவுகளோடு படைக்கப்பட்ட ஓர் படைப்பு.
இதின் பிரசவத்தை எதிர்நோக்கிக் காத்திருந்திருந்தேன். தவிர்க்க இயலாத காரணங்களால் #மாநாடு வெளியீடு தள்ளி வைக்கப்படுகிறது என்பதை மிகுந்த வலியோடு தெரிவித்துக்கொள்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
ஆகவே திட்டமிட்டபடி மாநாடு திரைப்படம் நாளை வெளியாகாது என்பது தற்போது உறுதியாகியுள்ளது.
#CinemaNews