பொழுதுபோக்குசினிமா

பிரியங்கா – ஜோனாஸ் விவாகரத்து! – முற்றுப்புள்ளியிட்ட பிரியங்கா

Share
FotoJet 5 5
Share

2018 ஆம் ஆண்டு நடிகை பிரியங்கா சோப்ரா அமெரிக்க பாப் பாடகரான நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திரையுலகில் முன்னணி நடிகையான இவர் தற்போது ஹாலிவுட்டில் பிரம்மாண்டமான திரைபடத்தில் நடித்து வருகின்றார்.

கடந்த வாரம் நடிகை பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் தனது சமூகவலைத் தளங்களிலுள்ள கணக்குகளின் பெயரிலிருந்து “ஜோனாஸை” நீக்கியுள்ளார். இது அவரின் திருமண உறவு குறித்த ஊகங்களுக்கு வழி வகுத்துள்ளதோடு ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால், இத்தகைய வதந்திக்கு மத்தியில் பிரியங்கா தனது கணவருடன் தீபாவளி பண்டிகையை தன் புதிய இல்லத்தில் கொண்டாடியுள்ளார். இவை குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி இருந்தது.

அதுமட்டுமல்லாது, சமீபத்தில் இடம் பெற்ற ஒரு காமடி நிகழ்ச்சி ஒன்றில் இருவரும் கலந்து சிறப்பித்துள்ளனர். அதன்போது நடிகை பிரியங்கா தனது கணவர் குறித்து மிக நகைச்சுவையாக பேசியுள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

priyankacoprajick1

குறித்த நிகழ்ச்சி உரையாடலில் நடிகை பிரியங்கா தமது வாழ்கையின் சில சுவாரஸ்யமான அம்சங்களை பகிர்ந்து கொண்டுள்ளார்.

அதாவது. தாம் இருவருக்கும் 10 வயது இடைவெளி இருப்பதாகவும் தனது கணவருக்கு 90 பற்றிய இசை குறிப்புக்கள் எதுவும் தெரியாது எனவும் தானே அதனை சொல்லி கொடுப்பதாகவும் வேடிக்கையாகவும் நகைச்சுவையாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமல்லாது நாங்கள் இருவரும் குழந்தை பெற்றுக்கொள்வதை கூடிய விரைவில் எதிர்பார்கிறோம் எனவும் மிக்க மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டுள்ளார்.

இந்த செய்தி மூலம் விவாகரத்து தொடர்பில் வைரலாகி வரும் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

இதனிடையில் பிரியங்காவின் தாயார் மது சோப்ராவும் குறித்த வதந்திகளுக்கு தக்க பதிலளித்துள்ளார். அதாவது பிரியங்கா தனது குடும்பபெயரை நீக்கினாலும் தனது கணவருடன் மிக அன்பான வாழ்கையே வாழ்ந்து வருகிறார் ஆகவே இதுபோன்ற தேவையற்ற வதந்திகளை பரப்ப வேண்டாம் என அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

1006756 priyanka chopra nick jonas

#CinemaNews

Share

Leave a comment

மறுமொழியொன்றை இடுங்கள்

Related Articles
31
சினிமா

சிம்பு-தனுஷுடன் ரொமான்ஸ் செய்ய நான் ரெடி.. பிரபல தொகுப்பாளினி ஒபன் டாக்

ரஜினி-கமல், அஜித்-விஜய் அடுத்து ரசிகர்களால் கொண்டாடப்பட்டவர் சிம்பு-தனுஷ். ரசிகர்கள் போட்டிபோட்டுக் கொண்டாலும் அவர்கள் நட்பாக தான்...

35
சினிமா

டிடி-யை உடை மாற்ற சொன்ன நடிகை.. நயன்தாரா தானா? முதல் முறையாக சொன்ன டிடி

தமிழில் பிரபல தொகுப்பாளராகி இருப்பவர் டிடி. அவருக்கு மிகப்பெரிய ரசிகர் கூட்டமும் இருக்கிறது என தெரியவேண்டியது...

32
சினிமா

12 பிரபலங்களுடன் டேட்டிங்.. 50 வயதாகியும் திருமணம் செய்துக்கொள்ளாமல் இருக்கும் நடிகை

சினிமாவில் காதல் சர்ச்சையில் சிக்காமல் தப்பித்தது சிலராக மட்டுமே இருக்க முடியும். அதுவும் பாலிவுட் திரையுலகம்...

33
சினிமா

அஜித் ஒரு குட்டி எம்ஜிஆர்.. AK குறித்து மனம் திறந்து பேசிய பிரபலம்

தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருப்பவர் அஜித். சமீபத்தில் குட் பேட் அக்லி எனும்...