வாய்ப்பு கொடுக்காத டாப் ஹீரோக்கள்.. காரணம் என்ன? நடிகை பிரியாமணி இப்படி சொல்லிட்டாரே
நடிகை பிரியாமணி பருத்திவீரன் படத்தில் முத்தழகு ரோலில் நடித்ததற்காக தேசிய விருது வென்றவர். அவர் அதன் பிறகு என்னதான் படங்கள் நடித்தாலும் பெரிய ஹீரோ படங்களில் அவருக்கு ஹீரோயின் சான்ஸ் கிடைக்கவில்லை.
தற்போது பெரிய இடைவெளிக்கு பிறகு பிரியாமணி மீண்டும் பிஸியான நடிகையாக மாறி இருக்கிறார். ஷாருக் கானின் ஜவான், அஜய் தேவ்கன் நடித்த மைதான் போன்ற படங்களில் அவர் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் சமீபத்திய ஒரு பேட்டியில் பிரியாமணியிடம் உங்களுக்கு ஏன் தமிழ் மற்றும் தெலுங்கில் டாப் ஹீரோக்கள் வாய்ப்பு தரவில்லை என கேட்டிருக்கின்றனர்.
“நான் யாரையும் குறை கூற விரும்பவில்லை. என்னை நடிக்க வைத்தால் அவர்களை நடிப்பில் மிஞ்சிவிடுவேன் என பயப்படுகிறார்கள் என சிலர் என்னிடம் சொல்வார்கள். ஆனால் அது உண்மை இல்லை என எனக்கு தெரியும்.”
“எனக்கு டாப் ஹீரோ படங்களில் வாய்ப்பு கிடைக்காததற்கு என்ன காரணம் என எனக்கும் தெரியவில்லை. அதை அந்த ஹீரோக்கள் மற்றும் தயாரிப்பாளர்களிடம் தான் கேட்க வேண்டும்” என பிரியாமணி கூறி இருக்கிறார்.
Comments are closed.