நடிகர் மற்றும் இயக்குநர் பிரதாப் போத்தன் இன்று காலை காலமானார் என்ற செய்தி திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் பிரதாப்போத்தன் மரணத்திற்கு முன்பு தனது பேஸ்புக்கில் மரணம் குறித்து சில பதிவுகள் சில வைரலாகியுள்ளது.
அதில் ‘நாம் தினம் எச்சில் விழுங்குவதால் கூட மரணம் ஏற்படுகிறது .
நீங்கள் ஒரு நோயின் காரணத்தை சரியாக கண்டுபிடித்து குணப்படுத்தாமல் அதன் அறிகுறிகளை மட்டும் குணப்படுத்தி வருகிறீர்கள் என்றால் நீங்கள் மரணம் வரை மருந்துகளை தான் நம்பியிருக்க வேண்டும்.
சிலர் அதிகமாக அக்கறை காட்டுவார்கள், ஆனால் என்னை பொறுத்தவரை அது காதல் என்பேன், வாழ்க்கை என்பது கடைசிவரை கட்டணங்களைச் செலுத்தியே கழிந்துவிடும்’ என்று தெரிவித்துள்ளார்.
மரணத்திற்கு முந்தைய நாட்களில் பிரதாப் போத்தன் மரணம் குறித்து பதிவு செய்திருப்பது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
#pratapPothan #Death #cinema
Leave a comment