தள்ளிப்போனது வலிமை!

ajith

அஜித் நடிப்பில் உருவாகி இருக்கும் வலிமை படத்தின் ரிலீஸ் திகதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா 3 ஆவது அலை பரவல் அதிகமாகியுள்ளதால், வட மாநிலங்களில் இரவு நேர ஊரடங்குகள் அமல்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் இந்தி, தெலுங்கு படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுகின்றன. ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். ஆகியோர் நடித்து தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் திரைக்கு வருவதாக இருந்த ஆர்.ஆர்.ஆர் படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

இதுபோல் பிரபாஸ் நடித்து தமிழ், தெலுங்கில் வெளியாக இருந்த ராதே ஷியாம் படத்தையும் தள்ளி வைத்துள்ளனர்.

இந்நிலையில், வலிமை படத்தை தள்ளி வைப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் அறிவித்துள்ளார்.

#CinemaNews,

Exit mobile version