இளம் நடிகை ‘பூனம் பாண்டே’ புற்றுநோயால் திடீர் உயிரிழப்பு!

tamilnaadi 28

இளம் நடிகை ‘பூனம் பாண்டே’ புற்றுநோயால் திடீர் உயிரிழப்பு!

இளம் நடிகையான பூனம் பாண்டேவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் இறந்துவிட்டதாக, அவரது குழுவினர் தெரிவித்துள்ளனர். இது இந்திய திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த 32 வயதுடைய நடிகை பூனம் பாண்டே இன்று காலை காலமாகியுள்ளார்.

மாடலிங் துறையில் பிரபலமான இவர் நிஷா என்ற திரைப்படம் மூலம் அறிமுகமாகி இந்தி, கன்னடா, தெலுங்கு படங்களில் நடித்துள்ளார்.

இவர், 2011 கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன் வெளியிட்ட வீடியோ மூலம் மிகவும் பிரபலமானார்.

தற்போது, அவரது மறைவிற்கு படக் குழுவினர் வெளியிட்ட பதிவில், “ எங்கள் அன்புக்குரிய பூனம் பாண்டேவை கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இழந்துவிட்டோம் என்பதைத்ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறோம்” என்று பதிவிட்டிருந்தனர்.

இதேவேளை, பூனம் பாண்டேவின் மறைவிற்கு பலரும் மிகுந்த வருத்தத்துடன் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

Exit mobile version