மணிரத்னம் இயக்கத்தில் லைகா நிறுவனத்தின் பிரமாண்டமான தயாரிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன் படம் செப்டம்பர் 30ஆம் திகதி உலகம் முழுவதும் தமிழ் உள்பட 5 மொழிகளில் வெளியாக உள்ளது.
விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, த்ரிஷா, ஐஸ்வர்யாராய், ஜெயராம், சரத்குமார், பார்த்திபன் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.
இந்நிலையில் தற்போது கிடைத்த தகவலின் படி இந்தபடத்தில் உலக நாயகன் கமல்ஹாசனும் இணைந்து உள்ளதாக கூறப்படுகிறது.
அவர் பொன்னியின் செல்வன் படத்தில் உள்ள முக்கிய கேரக்டருக்கு குரல் கொடுத்துள்ளார் என்றும், அவர் யாருக்கு குரல் கொடுத்துள்ளார் என்பதை படக்குழுவினர் ரகசியமாக வைத்திருக்கின்றனர் என்றும் கூறப்படுகிறது.
திரைப்படத்தில் அவர் இணைந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தாகும்.
#kamal haasan #ponniyinselvan #cinema
Leave a comment